சினிமா செய்திகள்

மமிதா பைஜு நடிக்கும் ‘ஹலோ டியர்’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

‘ஹலோ டியர்’ திரைப்படத்தை அறிமுக இயக்குநர் டினாய் பாலோஸ் இயக்குகிறார்.

சென்னை,

டினாய் பாலோஸ் இயக்கத்தில் சங்கீத் பிரதாப், மமிதா பைஜு உள்ளிட்டோர் நடிக்கும் ‘ஹலோ டியர்’ திரைப்படம் 2027 ஜனவரி 29ம் தேதி வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

"பிரேமலு" திரைப்படத்தின் மூலம் தென்னிந்திய ரசிகர்களிடையே பிரபலமானவர் நடிகை மமிதா பைஜு. அதனைத்தொடர்ந்து, தமிழில் இவர் நடித்த "டியூட்" திரைப்படமும் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இந்த வெற்றிகளுக்கு பிறகு தொடர்ந்து பல முன்னணி படங்களில் நடிக்க மமிதா பைஜுவிற்கு வாய்ப்புகள் குவியத் தொடங்கின. அந்த வகையில் அவரது நடிப்பில் வெளியான 'ஜனநாயகன்', 'விஸ்வநாத் அண்ட் சன்ஸ்', 'பெத்லேகேம் குடும்ப யூனிட்' ஆகிய 3 திரைப்படங்களும் ரூ.100 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளன. இது மமிதா பைஜுவின் திரைப்பயணத்தில் மேலும் ஒரு முக்கிய மைல்கல்லாக அமைந்துள்ளது.

மீண்டும் ‘பிரேமலு’ பட கூட்டணி

இதற்கிடையில், ‘பிரேமலு’ திரைப்படத்தின் மூலம் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்ற மமிதா பைஜு, சங்கீத் பிரதாப் ஜோடி மீண்டும் இப்படத்தில் இணைந்துள்ளது. இதனால், இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்த புதிய படத்திற்கு ‘ஹலோ டியர்’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.

‘ஹலோ டியர்’ திரைப்படத்தை அறிமுக இயக்குநர் டினாய் பாலோஸ் இயக்குகிறார். இவர் ‘தண்ணீர் மத்தன் தினங்கள்’ படத்தின் இணை எழுத்தாளர்களில் ஒருவராவார். ஆஷிக் உஸ்மான் புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் 20-வது தயாரிப்பாக இப்படத்தை ஆஷிக் உஸ்மான் தயாரிக்கிறார். படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைக்கிறார். நவீன மாநகரப் பின்னணியில் உருவாகும் காதல் மற்றும் நகைச்சுவை கலந்த திரைப்படமாக ‘ஹலோ டியர்’ உருவாகி வருகிறது.

ரிலீஸ் தேதி

இந்த நிலையில், ‘ஹலோ டியர்’ படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இந்த படம் அடுத்த ஆண்டு ஜனவரி 29-ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் எனப் படக்குழு தெரிவித்துள்ளது.

SCROLL FOR NEXT