சினிமா செய்திகள்

முருங்கைக்காய் சிப்ஸ் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

நடிகர் சாந்தனு நடித்துள்ள முருங்கைக்காய் சிப்ஸ் திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

தினத்தந்தி

அறிமுக டைரக்டர் ஸ்ரீஜர் இயக்கத்தில் நடிகர் சாந்தனு நடித்துள்ள திரைப்படம் 'முருங்கைக்காய் சிப்ஸ்'. இந்த படத்தில் சாந்தனுவிற்கு ஜோடியாக அதுல்யா ரவி நடித்துள்ளார். முக்கிய கதாபாத்திரங்களில் ரேஷ்மா, பாக்கியராஜ் ஆகியோர் நடித்துள்ளனர். 

லிப்ரா புரொடக்சன்ஸ் சார்பில் ரவீந்தர் சந்திரசேகரன் தயாரித்துள்ளார். ஏற்கெனவே படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் டிரைலர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது.

இந்த நிலையில் இன்று படத்தின் ரிலீஸ் தேதி பற்றிய அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி, முருங்கைக்காய் சிப்ஸ் திரைப்படம் வருகிற டிசம்பர் மாதம் 10-ந்தேதி தியேட்டர்களில் வெளியாக உள்ளது. 

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது