சினிமா செய்திகள்

அபிஷன் ஜீவிந்த் நடித்த “பிக்காசோ” படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியீடு

கௌதம் சிவராமன் இயக்கத்தில் சிவராஜ்குமார், அபிஷன் ஜீவிந்த் நடித்துள்ள ‘பிக்காசோ’ படத்திற்கு லியோன் ஜேம்ஸ் இசையமைத்துள்ளார்.

சென்னை,

‘பிக்காசோ’ படத்தின் முதல் பாடலான ‘ஹகுனா மாடாடா’ (Hakuna Matata) தற்போது வெளியாகியுள்ளது. இப்பாடலின் மூலம் அபிஷன் ஜீவிந்த் முதன்முறையாக பின்னணிப் பாடகராகவும் அறிமுகமாகியுள்ளார்.

‘டூரிஸ்ட் பேமிலி’ திரைப்படத்தின் மூலம் இயக்குநராக கவனம் பெற்ற அபிஷன் ஜீவிந்த், ‘வித் லவ்’ திரைப்படம் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றதுடன், நடிகர் ரஜினிகாந்தின் பாராட்டுகளையும் பெற்றது.

சிவராஜ்குமாருடன் இணையும் அபிஷன்

தற்போது அபிஷன் ஜீவிந்த், அறிமுக இயக்குநர் கௌதம் சிவராமன் இயக்கத்தில் உருவாகும் புதிய திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார். ‘பிக்காசோ’ எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமார், அபிஷன் ஜீவிந்த்தின் தந்தையாக நடிக்கிறார். மேலும், ஷிவானி நாகராம், யோகலட்சுமி, கானா வினோத் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். டிராமா கம்பெனி தயாரிக்கும் இப்படத்திற்கு லியோன் ஜேம்ஸ் இசையமைக்கிறார். தமிழ், கன்னடம், தெலுங்கு ஆகிய மூன்று மொழிகளில் இப்படம் உருவாகி வருகிறது.

பின்னணிப் பாடகராக அறிமுகம்

இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதற்கிடையே படத்தின் அறிமுகக் காட்சிகள் அடங்கிய கிளிம்ப்ஸ் வீடியோ வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. இந்த நிலையில், ‘பிக்காசோ’ படத்தின் முதல் பாடலான ‘ஹகுனா மாடாடா’ (Hakuna Matata) தற்போது வெளியாகியுள்ளது. இப்பாடலின் மூலம் அபிஷன் ஜீவிந்த் முதன்முறையாக பின்னணிப் பாடகராகவும் அறிமுகமாகியுள்ளார். இப்பாடலுக்கு தமிழ் ஆதவன் வரிகள் எழுதியுள்ளார்.

2027-ல் திரைக்கு வரும் ‘பிக்காசோ’

வித்தியாசமான கதைக்களத்தில் உருவாகி வரும் இப்படம், வரும் 2027-ம் ஆண்டு ஜனவரி மாதம் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கதாநாயகனாக அறிமுகமான பிறகு பாடகராகவும் புதிய முயற்சியில் இறங்கியுள்ள அபிஷன் ஜீவிந்த்துக்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

SCROLL FOR NEXT