சினிமா செய்திகள்

“சத்தியவான் சாவித்திரி” படத்திலிருந்து ‘ரைஸ் ஆப் சாவித்திரி’ என்ற பாடல் வெளியீடு

மிஷ்கின், கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள ‘சத்யவான் சாவித்திரி’ திரைப்படம் நாளை வெளியாகவுள்ளது.

சென்னை,

இயக்குநர் பிரவீன் விஜயே எழுதியுள்ள இந்த பாடலுக்கு வெங்கட் பிரபு குரல் கொடுத்துள்ளார். இந்த பாடல் ரசிகர்கள் மத்தியில் கவனத்தை பெற்று வருகிறது.

வழக்கறிஞர்களாக கீர்த்தி சுரேஷ் - மிஷ்கின்

நடிகை கீர்த்தி சுரேஷ் மற்றும் இயக்குனர் மிஷ்கின் இணைந்து நடித்துள்ள திரைப்படம் 'சத்யவான் சாவித்திரி'. வித்தியாசமான கதைக்களத்தில் உருவாகியுள்ள இப்படத்தை பிரவீன் எஸ். விஜய் இயக்கியுள்ளார். இப்படத்தில் கீர்த்தி சுரேஷ் வழக்கறிஞர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவருக்கு எதிராக வாதிடும் மற்றொரு வழக்கறிஞராக இயக்குனர் மிஷ்கின் நடித்துள்ளார். இவர்களுடன் பாலசரவணன், பாலாஜி சக்திவேல், ஆர். சுந்தர்ராஜன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இப்படத்திற்கு சாம். சி.எஸ். இசையமைத்துள்ளார். ஜீ ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. வழக்கறிஞர்களை மையமாகக் கொண்ட கதைக்களத்தில் உருவாகியுள்ள இப்படத்தின் டிரெய்லர் அண்மையில் வெளியிடப்பட்டது. அதில் இடம்பெற்றுள்ள காட்சிகள் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளன.

யு/ஏ சான்றிதழ்

'சத்யவான் சாவித்திரி' திரைப்படத்தைப் பார்வையிட்ட தணிக்கை வாரியம், இப்படத்திற்கு யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது. இப்படம் வரும் நவம்பர் 20-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. கீர்த்தி சுரேஷ் - மிஷ்கின் முதன்முறையாக இணைந்து நடித்துள்ள இப்படம் ரசிகர்களிடம் எந்த அளவுக்கு வரவேற்பைப் பெறும் என்பதைப் பொறுத்திருந்து பார்க்கலாம்.

4வது பாடல் வெளியீடு

இந்த நிலையில், இந்த படத்திலிருந்து 4வது பாடலாக ‘ரைஸ் ஆப் சாவித்திரி’ என்ற பாடல் வெளியாகி உள்ளது. இயக்குநர் பிரவீன் விஜயே எழுதியுள்ள இந்த பாடலுக்கு வெங்கட் பிரபு குரல் கொடுத்துள்ளார். இந்த பாடல் ரசிகர்கள் மத்தியில் கவனத்தை பெற்று வருகிறது.

SCROLL FOR NEXT