சினிமா செய்திகள்

'சாகுந்தலம்' படத்தில் இருந்து புதிய பாடலை வெளியிட்டது படக்குழு

சமந்தா நடித்த 'சாகுந்தலம்' படத்தில் இருந்து 'மகிமை ஆலயம்' என்ற வீடியோ பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது.

சென்னை,

இயக்குனர் குணசேகர் இயக்கத்தில் சமந்தா நடித்த 'சாகுந்தலம்' திரைப்படம் கடந்த ஏப்ரல் 14-ந்தேதி திரையரங்குகளில் வெளியானது. இப்படத்தில் மலையாள நடிகர் தேவ் மோகன் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். ஸ்ரீ வெங்கடேஷ்வரா கிரியேஷன்ஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு மணிசர்மா இசையமைத்துள்ளார்.

இந்த படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி போன்ற 5 மொழிகளில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. இந்நிலையில், இப்படத்தின் 'மகிமை ஆலயம்' பாடலின் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. கபிலன் வரிகளில் அனுராக் குல்கர்னி பாடியுள்ள இந்த பாடலின் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.