சென்னை,
'ஜெயிலர்-2' படம் இணையத்தில் கசிந்து விட்டதாக வந்த செய்தி எங்களையும் அதிர்ச்சியடைய வைத்தது. ஆனால் பின்னர் இவை வெறும் வதந்தி என்பது தெரியவந்தது. படத்தின் மீது வேண்டுமென்றே எதிர்மறை கருத்துகளை சிலர் பரப்பி வருகிறார்கள். இதை யாரும் நம்பவேண்டாம், என்றனர்.
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த 2023-ம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘ஜெயிலர்’. ரம்யா கிருஷ்ணன், மிர்ணா, விநாயகன், வசந்த் ரவி உள்ளிட்ட பலர் நடித்திருந்த இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது. அனிருத் இசையமைத்திருந்தார். ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற இப்படம், உலகளவில் ரூ.600 கோடிக்கும் மேல் வசூலித்ததாக கூறப்பட்டது.
‘ஜெயிலர்’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தற்போது அதன் இரண்டாம் பாகமான ‘ஜெயிலர் 2’ திரைப்படம் உருவாகி வருகிறது. மீண்டும் ரஜினிகாந்த் - நெல்சன் திலீப்குமார் கூட்டணி இணைந்துள்ளதால், இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. முதல் பாகத்தைப் போலவே இரண்டாம் பாகத்திலும் மோகன்லால், சிவராஜ்குமார் ஆகியோர் முக்கிய கேமியோ கதாபாத்திரங்களில் நடித்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் ரம்யா கிருஷ்ணன், பாலிவுட் நடிகர் மிதுன் சக்கரவர்த்தி, சந்தானம், சுராஜ் வெஞ்சரமூடு, யோகி பாபு உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.
இந்த படம் வருகிற 15-ந்தேதி உலகம் முழுவதும் திரைக்கு வரவிருக்கிறது. சமீபத்தில் படத்தின் டிரெய்லரும் வெளியாகி கவனம் ஈர்த்து வருகிறது. இப்படத்தின் முன்பதிவு வெளிநாடுகளில் தொடங்கி சுமார் ரூ.10 கோடி வரை வசூல் நெருங்கிவிட்டதாக கூறப்படுகிறது, மேலும் உலகம் முழுவதும் இப்படம் முதல் நாள் வசூல் ரூ.100 கோடியை தாண்டும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தநிலையில் 'ஜெயிலர்-2' முழு திரைப்படமும் இணையத்தில் கசிந்துவிட்டதாக சமூக வலை தளங்களில் நேற்று ஒரு தகவல் வெளியாகி அதிர்ச்சியை உண்டாக்கியது. இதனை படக்குழுவினர் மறுத்துள்ளனர்.
இதுகுறித்து அவர்கள் கூறும்போது, 'ஜெயிலர்-2' படம் இணையத்தில் கசிந்து விட்டதாக வந்த செய்தி எங்களையும் அதிர்ச்சியடைய வைத்தது. ஆனால் பின்னர் இவை வெறும் வதந்தி என்பது தெரியவந்தது. படத்தின் மீது வேண்டுமென்றே எதிர்மறை கருத்துகளை சிலர் பரப்பி வருகிறார்கள். இதை யாரும் நம்பவேண்டாம், என்றனர்.