சென்னை,
கடந்த 2019-ம் ஆண்டு வெளியான 'நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா' படத்தில் நடித்து தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமானவர் ரியோ ராஜ். அதனை தொடர்ந்து 'பிளான் பண்ணி பண்ணனும், ஜோ, ஸ்வீட் ஹார்ட்' , 'ஆண்பாவம் பொல்லாதது' ஆகிய படங்களில் நடித்து மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றார். மேலும் அறிமுக இயக்குனர் ராம்சந்திரன் கண்ணன் இயக்கத்தில் 'ராம் இன் லீலா' என்ற படத்தில் நடித்துள்ளார். காதல் கதைக்களத்தில் உருவாகியுள்ள இப்படம் விரைவில் வெளியாக உள்ளது.
இதற்கிடையில், நடிகர் ரியோ ராஜ் ‘ரிவர் ரூட் ஸ்டுடியோஸ்’ என்ற பெயரில் தயாரிப்பு நிறுவனம் தொடங்கியுள்ளார். இந்த நிறுவனத்தின் மூலம் புதிய படம் ஒன்றை தயாரிக்க உள்ளார். இந்த படத்தை அறிமுக இயக்குனர் கதிரவன் சம்பத் எழுதி இயக்குகிறார். இதில் ராம் நிஷாந்த் மற்றும் ஜேஎஸ் கவி முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க உள்ளார். இந்த புதிய படத்தின் டைட்டில் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, இந்த படத்திற்கு ‘பிரவுன் மணி’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், ‘பிரவுன் மணி’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.