சினிமா செய்திகள்

கென் கருணாசை பாராட்டிய ரிஷப் ஷெட்டி

கென் கருணாஸ் இயக்கி, நடித்து கடந்த மாதம் வெளியான படம் யூத்.

அம்பாசமுத்திரம் அம்பானி, நெடுஞ்சாலை படங்களின் மூலம் குழந்தை நட்சத்திரமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் கென் கருணாஸ். நடிகர் கருணாசின் மகனான இவர் தொடர்ந்து அசுரன் , விடுதலை 2 , வாத்தி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

இதனிடையே, கென் கருணாஸ் இயக்கி, நடித்து கடந்த மாதம் வெளியான படம் யூத். ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்துள்ள இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இத்திரைப்படம் உலக அளவில் ரூ. 70 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது.

இந்நிலையில், கென் கருணாசை கன்னட நடிகரும், டைரக்டருமான ரிஷப் ஷெட்டி பாராட்டியுள்ளார். ரிஷப் ஷெட்டியை கென் கருணாஸ் இன்று சந்தித்துள்ளார். இந்த சந்திப்பின்போது யூத் படத்தில் சிறப்பாக செயல்பட்டதற்கு கென் கருணாசை ரிஷப் ஷெட்டி பாராட்டினார்.

SCROLL FOR NEXT