ஹாலிவுட் திரையுலகில் மிகவும் பிரபலமான கதாபாத்திரங்களில் ஒன்றான ஜேம்ஸ் பாண்ட் கதாபாத்திரத்தில் நடிக்க நடிகர் ராபர்ட் பாட்டின்சன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதனை அமேசான் எம்ஜிஎம் ஸ்டூடியோஸ் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.இதன் மூலம் ஜேம்ஸ் பாண்ட் கதாபாத்திரத்தில் நடிக்கும் 7-வது நடிகர் என்ற பெருமையை ராபர்ட் பாட்டின்சன் பெற்றுள்ளார். கடந்த 2021-ம் ஆண்டு வெளியான 'நோ டைம் டு டை' திரைப்படத்துடன் ஜேம்ஸ் பாண்ட் கதாபாத்திரத்தில் இருந்து டேனியல் கிரேக் விலகினார். இதையடுத்து அடுத்த ஜேம்ஸ் பாண்ட் யார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் நீண்டகாலமாக நிலவி வந்தது.இந்த நிலையில், தற்போது ராபர்ட் பாட்டின்சன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
அடுத்த ஜேம்ஸ் பாண்ட் திரைப்படத்தை பிரபல இயக்குநர் டெனிஸ் வில்லெனுவே இயக்க உள்ளார். இவர் 'டூன்', 'அரைவல்' உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கியவர்.இந்த படத்திற்கு 'பீக்கி பிளைண்டர்ஸ்' தொடரை உருவாக்கிய ஸ்டீவன் நைட் திரைக்கதை எழுதுகிறார். ஆமி பாஸ்கல் மற்றும் டேவிட் ஹெய்மன் ஆகியோர் தயாரிக்கின்றனர்.இது ஜேம்ஸ் பாண்ட் திரைப்பட வரிசையில் உருவாகும் 26-வது படமாகும். படத்தின் பெயர் மற்றும் வெளியீட்டு தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை.
ஜேம்ஸ் பாண்ட் கதாபாத்திரத்தில் நடிக்க தேர்வு செய்யப்பட்டிருப்பது குறித்து ராபர்ட் பாட்டின்சன் கூறுகையில், சினிமாவில் மிகவும் புகழ்பெற்ற கதாபாத்திரங்களில் ஜேம்ஸ் பாண்டும் ஒன்று என்றும், 007 கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்திருப்பது வாழ்நாளில் கிடைத்த மிகப்பெரிய கவுரவம் என்றும் தெரிவித்துள்ளார்.மேலும், இந்த வாய்ப்பை வழங்கிய இயக்குநர் டெனிஸ் வில்லெனுவே மற்றும் அமேசான் எம்ஜிஎம் ஸ்டூடியோஸ் நிறுவனத்திற்கு நன்றி தெரிவித்துள்ளார்.