சினிமா செய்திகள்

தெலுங்கு நடிகருடன் காதலா? பாக்யஸ்ரீ போர்ஸின் பேச்சால் பரபரப்பு!

சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் 'சேயோன்' படத்தில் பாக்யஸ்ரீ போர்ஸ் கதாநாயகியாக நடிக்கிறார்.

'மிஸ்டர் பச்சன்', 'கிங்டம்' உள்ளிட்ட திரைப்படங்கள் மூலம் தென்னிந்திய திரையுலகில் அறிமுகமான நடிகை பாக்யஸ்ரீ போர்ஸ், குறுகிய காலத்திலேயே ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார். தனது இயல்பான நடிப்பால் பிரபலமான அவர், தற்போது கமல்ஹாசன் தயாரிப்பில், சிவகார்த்திகேயன் நடிக்கும் 'சேயோன்' திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார்.

மதுரை பின்னணியில் கருமாத்தூர் தெய்வங்களை மையமாகக் கொண்டு உருவாகும் இந்தப் படம், ஆக்ஷன் மற்றும் நகைச்சுவை கலந்த கிராமப்புற குடும்ப பொழுதுபோக்கு திரைப்படமாக உருவாகி வருகிறது. இதைத் தொடர்ந்து தெலுங்கில் உருவாகி வரும் 'லெனின்' திரைப்படத்திலும் பாக்யஸ்ரீ போர்ஸ் நடித்து வருகிறார்.

"ஐதராபாத் என் இரண்டாவது வீடு"

இந்த நிலையில், சமீபத்தில் அளித்த பேட்டியில் பாக்யஸ்ரீ போர்ஸ், "அவுரங்காபாத் என் முதல் வீடு என்றால், ஐதராபாத் தற்போது என் இரண்டாவது வீடாக மாறிவிட்டது" என்று தெரிவித்துள்ளார். இதையடுத்து நிகழ்ச்சித் தொகுப்பாளரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்தார்.

காதல் வதந்தியை கிளப்பிய ரசிகர்கள்

பாக்யஸ்ரீ போர்ஸின் இந்தப் பேச்சு சமூக வலைதளங்களில் வைரலானதைத் தொடர்ந்து, அவர் மறைமுகமாக ஒரு தெலுங்கு நடிகருடனான காதலை சுட்டிக்காட்டியிருக்கலாம் என்று ரசிகர்கள் யூகித்து வருகின்றனர்.

"யார் அந்த நடிகர்?" என்ற கேள்வியுடன் பலரும் சமூக வலைதளங்களில் விவாதித்து வரும் நிலையில், இந்த தகவலுக்கு பாக்யஸ்ரீ போர்ஸ் தரப்பில் எந்த அதிகாரப்பூர்வ விளக்கமும் வெளியாகவில்லை. இதனால், இந்த விவகாரம் தற்போது இணையத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.