சினிமா செய்திகள்

ரூசோ பிரதர்ஸின் “அவெஞ்சர்ஸ் டூம்ஸ்டே” படத்தின் புதிய போஸ்டர் வெளியீடு

‘அவெஞ்சர்ஸ் டூம்ஸ்டே’ திரைப்படம், வரும் டிசம்பர் 18-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

மார்வெல் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் அவெஞ்சர்ஸ் படங்களின் புதிய பாகமான ‘அவெஞ்சர்ஸ் டூம்ஸ்டே’ திரைப்படத்தின் புதிய போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்களை கொண்டுள்ள மார்வெல் சூப்பர் ஹீரோ திரைப்பட வரிசையில் அடுத்ததாக வெளியாகவுள்ள ‘அவெஞ்சர்ஸ்: டூம்ஸ்டே’ திரைப்படம் மீது மிகுந்த எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

ரூசோ பிரதர்ஸ் மீண்டும் இணைவு

‘அவெஞ்சர்ஸ்: இன்பினிட்டி வார்’ மற்றும் ‘அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம்’ போன்ற மாபெரும் வெற்றிப் படங்களை இயக்கிய ரூசோ பிரதர்ஸ், ‘அவெஞ்சர்ஸ்: டூம்ஸ்டே’ படத்தையும் இயக்கியுள்ளனர். இந்தப் படத்தில் ராபர்ட் டவுனி ஜூனியர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும், ஷூரி, கிறிஸ் எவன்ஸ், ஜேம்ஸ் மார்ஸ்டன், வனேசா கிர்பி, ரெபேக்கா ரோமிஜின் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

மார்வெல் காமிக்ஸ் கதைகளின் சூப்பர் வில்லனான ‘டாக்டர் டூம்’ கதாபாத்திரத்தை முதன்மையாகக் கொண்டு உருவாகியுள்ள இந்தப் படம் மார்வெல் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. அயர்ன் மேன் கதாபாத்திரத்தில் நடித்து உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்களை ஈர்த்த நடிகர் ராபர்ட் டவுனி ஜூனியர் இப்படத்தில் ‘டாக்டர் டூம்’ கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

டிசம்பர் 18-ல் உலகம் முழுவதும் ரிலீஸ்

மார்வெல் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வரும் ‘அவெஞ்சர்ஸ்: டூம்ஸ்டே’ திரைப்படம், வரும் டிசம்பர் 18-ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இதற்கான விளம்பர பணிகளை படக்குழு தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.

மார்வெல் உலகிற்கு திரும்பும் ‘டாக்டர் டூம்’

டாக்டர் டூம் கதாபாத்திரத்துடன் லட்வெரியன் விட்சஸ் இருக்கும் புதிய போஸ்டரை ‘அவெஞ்சர்ஸ் டூம்ஸ்டே’ படக்குழு வெளியிட்டுள்ளது. ராபர்ட் டவுனி ஜூனியர் , டாக்டர் டூம் கதாபாத்திரத்தில் மார்வெல் உலகிற்கு திரும்புகிறார்

SCROLL FOR NEXT