சினிமா செய்திகள்

சபரிமலை தங்கம் திருட்டு வழக்கு: நடிகர் ஜெயராமுக்கு அமலாக்கத் துறை சம்மன்

அமலாக்​கத் துறை சார்​பில் நடிகர் ஜெய​ரா​முக்கு சம்​மன் அனுப்​பப்​பட்டு உள்​ளது.

கேரளா மாநிலம் பத்தினம்திட்டா மாவட்டத்தில் சபரிமலை அய்யப்பன் கோவில் அமைந்துள்ளது. உலக அளவில் பிரசித்தி பெற்ற இந்த கோவிலில் தங்கம் திருடப்பட்டதாக எழுந்த புகார், பக்தர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது, கடந்த 2019 ஆம் ஆண்டு சபரிமலை சன்னிதானம் அருகே உள்ள துவாரபாலகர் சிலையில் இருந்த தங்கக் கவசம் பராமரிப்பு பணிக்காக எடுக்கப்பட்டது. இதற்காக திருவிதாங்கூர் தேவஸ்தானம் போர்டு அந்த கவசங்களை ஒப்படைத்தபோது அதன் எடை 42.8 கிலோவாக இருந்தது. அதை செப்பனிட்ட பிறகு, சென்னை நிறுவனத்தால் மீண்டும் ஒப்படைக்கப்பட்டபோது அதன் எடை 38.26 கிலோவாக குறைந்திருந்தது. அதாவது, 4.54 கிலோ தங்கம் மாயமாகி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. . இதுதொடர்​பாக கேரள ஐகோர்ட்டு உத்​தர​வின்​பேரில் அந்த மாநில காவல் துறை​யின் சிறப்பு புலனாய்வு குழு விசா​ரணை நடத்தி வரு​கிறது. இதே விவ​காரம் தொடர்​பாக அமலாக்​கத் துறை தனி​யாக வழக்கு பதிவு செய்து விசா​ரித்து வரு​கிறது.

சபரிமலை அய்யப்​பன் கோயில் கரு​வறை கதவு​கள், துவார பால​கர் சிலைகளுக்கு சென்​னை​யில் தங்க மூலாம் பூசி​ய​போது சென்னை அசோக் நகரில் உள்ள நடிகர் ஜெய​ராம் வீட்​டுக்கு அவை எடுத்​துச் செல்​லப்​பட்டு சிறப்பு பூஜை, வழி​பாடு​கள் நடித்தப்​பட்​டன. இதுதொடர்​பாக நடிகர் ஜெய​ராமிடம் கேரள சிறப்பு புல​னாய்வு குழு அண்​மை​யில் விசா​ரணை நடத்​தி​யது. இந்த நிலையில், அமலாக்​கத் துறை சார்​பில் நடிகர் ஜெய​ரா​முக்கு சம்​மன் அனுப்​பப்​பட்டு உள்​ளது. இந்த சம்மனை ஏற்று அமலாக்​கத் துறை அதி​காரி​கள் முன்பு நடிகர் ஜெயராம் நேரில் ஆஜராகி விளக்​கம் அளிப்​பார் என்று தெரிகிறது.