சினிமா செய்திகள்

10 கோடி பார்வைகளை கடந்த சாய் அபயங்கரின் “ரதிமா” பாடல்

சாய் அபயங்கர் இசையில் 6வது இன்டீ பாடலான ‘ரதிமா’ பாடல் கடந்த ஆகஸ்ட் 24ந் தேதி வெளியானது.

இசையமைப்பாளர் சாய் அபயங்கரின் ‘ரதிமா’ பாடல் 10 கோடி பார்வைகளை கடந்துள்ளது.

ஆல்பம் பாடல்கள் மூலம் பிரபலம்

சாய் அபயங்கர், ‘கட்சி சேரா’, ‘ஆச கூட’ உள்ளிட்ட ஆல்பம் பாடல்கள் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர். இவரது பாடல்களுக்கு கிடைத்த மிகப்பெரிய வரவேற்பைத் தொடர்ந்து, திரைப்படங்களுக்கு இசையமைக்கும் வாய்ப்புகளும் அவரைத் தேடி வந்தன.

‘டியூட்’ மூலம் திரையுலகில் அறிமுகம்

சாய் அபயங்கர் இசையமைத்த முதல் திரைப்படமாக ‘டியூட்’ வெளியானது. இப்படத்தின் பாடல்கள் மற்றும் இசைக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. தற்போது அட்லீ இயக்கும் ‘ராகா’ படத்திற்கு இசையமைத்துவருகிறார்.

5-வது இசை ஆல்பம்- ‘பவழ மல்லி’

சாய் அபயங்கர் ‘பவழ மல்லி’ என்ற 5-வது இன்டீ பாடலை சமீபத்தில் வெளியிட்டார். இந்த பாடலை விவேக் எழுத, சுருதி ஹாசன் பாடியிருந்தார். இந்தப் பாடலில் நடிகை கயாடு லோஹர் உடன் சாய் அபயங்கர் இணைந்து நடனமாடியிருப்பது ரசிகர்களின் கவனத்தை பெரிதும் ஈர்த்தது. இந்த பாடல் வெளியான குறுகிய காலத்தில் அதிக பார்வைகளை பெற்றுள்ளது. அதன்படி, யூடியூபில் இதுவரை 28 கோடி பார்வைகளை கடந்து வைரலாகியுள்ளது.

புதுமையான இசை மொழி

இன்டீ பாடல்கள் மூலம் ரசிகர்களை கவர்ந்த சாய் அபயங்கர், தற்போது முன்னணி திரைப்படங்களிலும் இசையமைத்து வருகிறார். புதுமையான இசை அணுகுமுறையால் தமிழ் திரையுலகில் வேகமாக வளர்ந்து வரும் இளம் இசையமைப்பாளர்களில் ஒருவராக தன்னை நிலைநிறுத்தி வருகிறார்.

6-வது இன்டீ பாடல் ‘ராதிமா’

சாய் அபயங்கர் தனது 6-வது இன்டீ பாடல் வருகிற 24ந் தேதி ‘ராதிமா’ என்ற புதிய இன்டீ பாடல் கடந்த ஆகஸ்ட் 24ந் தேதி வெளியானது. சாய் அபயங்கரின் ‘ராதிமா’ ஆல்பத்தில் நடிகை பாக்யஸ்ரீ போர்ஸ் இணைந்து நடித்துள்ளார்.

10 கோடி பார்வைகளை கடந்த ‘ரதிமா’ பாடல்

இந்நிலையில், இசையமைப்பாளர் சாய் அபயங்கரின் ‘ரதிமா’ பாடல் 10 கோடி பார்வைகளை கடந்துள்ளது. இதனை சாய் அபயங்கர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT