சினிமா செய்திகள்

வாக்களிக்க வந்த சாய் பல்லவி: சூழ்ந்து கொண்டு செல்பி எடுத்த ரசிகர்கள்

காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்றுள்ளது.

தமிழக சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று நடைபெற்றது. 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்றுள்ளது. அரசியல் தலைவர்கள், திரைப்பிரபலங்கள் என அனைத்து தரப்பினரும் தங்கள் ஜனநாயக கடமையை நிறைவேற்றினார்கள்.

அந்த வகையில் நடிகை சாய் பல்லவி, தனது வாக்கினை இன்று கோவை கவுண்டம்பாளையத்தில் உள்ள வாக்குச்சாவடியில் செலுத்தினார். சாய் பல்லவியை பார்த்ததும் ரசிகர்கள் அவருடன் ஆர்வத்துடன் செல்பி எடுத்து கொண்டனர்.