சினிமா செய்திகள்

தங்கையின் திருமண நிச்சயத்தில் நடனமாடிய சாய்பல்லவி... வீடியோ வைரல்

நடிகை பூஜா கண்ணன் விரைவில் திருமணம் செய்துகொள்ள இருப்பதாக அறிவித்தார்.

சென்னை,

கடந்த 2015ம் ஆண்டு மலையாளத்தில் வெளியான 'பிரேமம்' படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகி ரசிகர்களை கவர்ந்தவர் நடிகை சாய் பல்லவி. இவர் தமிழில் தியா, மாரி 2, என்.ஜி.கே, கார்கி போன்ற படங்களில் நடித்துள்ளார். தற்போது சிவகார்த்திகேயனின் 'எஸ்.கே 21' படத்தில் நடித்து வருகிறார்.

சாய்பல்லவிக்கு பூஜா கண்ணன் என்ற தங்கை உள்ளர். இவர் தமிழில் 'சித்திரை செவ்வானம்' படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானார். இவர் சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விரைவில் திருமணம் செய்துகொள்ள இருப்பதாக அறிவித்தார். தனது காதலன் வினீத் என்பவரையும் ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்தினார்.

View this post on Instagram

இந்நிலையில் இவர்களின் திருமண நிச்சயதார்த்த விழா சமீபத்தில் நடந்தது. இந்த விழாவில் நடிகை சாய்பல்லவி தனது குடும்பத்துடன் சேர்ந்து நடனமாடி உள்ளார். தற்போது அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.