சினிமா செய்திகள்

சாய் பல்லவியின் “ஏக் தின்” டிரெய்லர் நாளை வெளியீடு

அமீர்கான் தயாரிப்பில் ஜுனைத் கான், சாய் பல்லவி நடிக்கும் ‘ஏக் தின்’ படம் வரும் மே 1ம் தேதி வெளியாகிறது.

பிரேமம், அமரன், ஷ்யாம் சிங்கா ராய் மற்றும் பிடா போன்ற பல வெற்றிப் படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்திருப்பவர் சாய் பல்லவி . ரசிகர்கள் அவரை நல்ல கதாபாத்திரங்களை தேர்ந்தெடுப்பதற்காகப் பாராட்டுகிறார்கள்.

சாய் பல்லவி, நடிகர் அமீர்கான் தயாரிப்பில் உருவாகும் ‘ஏக் தின்’ எனும் புதிய திரைப்படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமாகின்றார். இயக்குநர் சுனில் பாண்டே இயக்கத்தில் உருவாகும், இந்தப் படத்தில் நடிகர் ஜுனைத் கான் நாயகனாக நடிக்கின்றார். மேலும், இப்படத்திற்கு இசையமைப்பளர் ராம் சம்பத் இசையமைக்கின்றார்.

‘ஏக் தின்’ திரைப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியானது. இந்தப் படம் வரும் மே 1ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், ‘ஏக் தின்’ திரைப்படத்தின் டிரெய்லர் நாளை வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.