மும்பை,
மும்பை வோர்லி பகுதியில் நேரு மைதானத்தில் நடைபெறும் வியாக்யான்மாலா நிகழ்ச்சி இன்றும், நாளையும் நேரு மைய அரங்கில் நடைபெறுகிறது. இந்த நிகழ்வில் மூத்த ஆர்.எஸ்.எஸ் தலைவர்கள் மற்றும் பேச்சாளர்கள் பொது மக்களுடன் கலந்துரையாடலில் ஈடுபடுகின்றனர். இந்த இரண்டு நாள் நிகழ்வு, ஆர்.எஸ்.எஸ்-இன் பயணம், சமூகத்தில் அதன் பங்கு, அதன் எதிர்காலத்தை வடிவமைக்கும் யோசனைகள் மற்றும் கண்ணோட்டங்கள் குறித்து சிந்திப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்நிலையில், ஆர்எஸ்எஸ் நூற்றாண்டு விழாவையொட்டி மும்பையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், பாலிவுட் நடிகர் சல்மான்கான் கலந்துகொண்டார். சல்மான் கான் இன்று நிகழ்ச்சி நடைபெறும் இடத்துக்கு வந்தபோது, கூட்டத்தில் இருந்த சிலர் தங்கள் ஸ்மார்ட்போன்களில் அவரைப் புகைப்படம் எடுக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
பிரபல திரைப்படத் தயாரிப்பாளர் சுபாஷ் கை மற்றும் புகழ்பெற்ற பாடலாசிரியர், கவிஞர் மற்றும் எழுத்தாளர் பிரசூன் ஜோஷி ஆகியோருடன் அமர்ந்திருந்த சல்மான் கான், மோகன் பாகவத் உரையாற்றியதை மிகுந்த கவனத்துடன் கேட்டார்.