சினிமா செய்திகள்

பிரீத்தி ஜிந்தாவுக்கு திடீரென வாழ்த்து சொன்ன சல்மான் கான்: ஏன் தெரியுமா?

ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் அணி கலக்கி வருவதால், அதன் இணை உரிமையாளரான பிரித்தி ஜிந்தாவுக்கு சல்மான் கான் வாழ்த்து கூறி பதிவிட்டுள்ளார்.

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் விளையாடி வரும் பஞ்சாப் கிங்ஸ் அணியின் இணை உரிமையாளராக நடிகை பிரீத்தி ஜிந்தா உள்ளார். இவரது அணி நடப்பு ஐபிஎல் தொடரில் இதுவரை தோல்வியே கண்டிராமல் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. விளையாடிய 4 போட்டிகளில் 3 ல் வெற்றி, ஒரு போட்டியில் முடிவு இல்லாமல் போனது என மொத்தம் 7 புள்ளிகளுடன் புள்ளிகள் பட்டியலில் 2வது இடத்தில் உள்ளது.

ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் அணி கலக்கி வருவதால், அதன் இணை உரிமையாளரான பிரித்தி ஜிந்தாவுக்கு சல்மான் கான் வாழ்த்து கூறி பதிவிட்டுள்ளார். சல்மான்கான் தனது எக்ஸ் பதிவில் கூறியிருப்பதாவது: வெல்டன்...வாழ்த்துகள் ஜிந்தா.. உங்கள் அணி சிறப்பாக விளையாடுகிறது” என்று பதிவிட்டுள்ளார். சல்மானின் இந்த வாழ்த்து செய்தி வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. சல்மான் கானும் பிரீத்தி ஜிந்தாவும் 2000-களில் பல்வேறு படங்களில் ஒன்றாக நடித்துள்ளனர்.