சினிமா செய்திகள்

சல்மான் கான் படத்தின் 9-ம் ஆண்டு நிறைவையொட்டி படப்பிடிப்பு வீடியோ வெளியீடு

சல்மான் கான் மற்றும் குழந்தையாக நடித்த ஹர்ஷாலி மல்ஹோத்ராவின் 'பஜ்ரங்கி பைஜான்' படம் வெளியாகி இன்றுடன் 9 வருடங்கள் நிறைவையொட்டி தயாரிப்பு நிறுவனம் படப்பிடிப்பு வீடியோவை வெளியிட்டுள்ளது.

மும்பை,

2015-ம் ஆண்டு வெளியான நகைச்சுவை திரைப்படம் 'பஜ்ரங்கி பைஜான்'. இந்த படத்தை கபீர் கான் எழுதி இயக்கினார். இத்திரைப்படத்தில் அறிமுக நடிகை ஹர்ஷாலி மல்ஹோத்ரா, கரீனா கபூர் கான் மற்றும் நவாசுதீன் சித்திக் ஆகியோர் நடித்துள்ளனர். இந்தப்படத்தில் கதாநாயகனாக சல்மான் கான் நடித்துள்ளார். இந்த படம் 2015-ம் ஆண்டு வெளியான போது ரசிகர்களிடையே அமோக வரவேற்பை பெற்றது.

இந்தப்படம் வெளியாகி இன்றுடன் 9 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இந்தநிலையில் இதுகுறித்த பதிவு ஒன்றை சல்மான் கான் பிலிம்ஸ் நிறுவனம் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. அதில், 'பஜ்ரங்கி பைஜானின்' படப்பிடிப்பின் போது திரைக்குப் பின்னால் உள்ள தருணங்கள், சண்டை காட்சிகளுக்கு முன்பும், பின்பும் நடந்த வேடிக்கையான தருணங்களை உங்களை நினைவூட்டும் விதமாக பதிவிடப்பட்டுள்ளது என்று அதில் குறிப்பிட்டிருந்தனர். மேலும், படத்தில் முன்னியாக நடித்த ஹர்ஷாலி மல்ஹோத்ரா என்ற குழந்தை கலைஞருடன் அவர் பகிர்ந்து கொண்ட அழகான தருணங்களும் அதில் இடம் பெற்றிருந்தன.

View this post on Instagram

இந்த பதிவிற்கு ரசிகர்கள் தங்களின் கருத்துகளை பதிவிட்டுள்ளனர். அதில், "இது சிறந்த திரைப்படங்களில் ஒன்று, இது வெறும் படம் அல்ல; இது ஒரு ரத்தினம், பொக்கிஷம். சந்தேகத்திற்கு இடமின்றி சல்மான் கானின் மிகவும் வெற்றிகரமான மற்றும் விரும்பப்படும் திரைப்படங்களில் ஒன்றாகும்" என்று ரசிகர்கள் தங்களின் கருத்துகளை பதிவிட்டுள்ளனர். மேலும், 'பஜ்ரங்கி பைஜான் 2' படத்திற்கான கதை தயாராகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.