சினிமா செய்திகள்

சமந்தா - ராஜ் நிடிமோரு தம்பதிக்கு ஆண் குழந்தை - பெயர் என்ன தெரியுமா..?

சமந்தா பிரபல பாலிவுட் இயக்குநர் ராஜ் நிடிமோரை கடந்த ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.

சமந்தா - ராஜ் நிடிமோரு தம்பதிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.

முன்னணி நடிகை

தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சமந்தா. தமிழ், தெலுங்கு மொழிகளில் பல வெற்றிப் படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம்பிடித்த அவர், பாலிவுட்டில் இணையத் தொடர்களில் நடித்து இந்திய அளவில் கவனிக்கப்பட்டார். தற்போது சினிமாவைத் தாண்டி தொழில் துறையிலும் கவனம் செலுத்தி வருகிறார்.

மா இண்டி பங்காரம்

நடிகர் நாக சைதன்யாவை விவாகரத்து செய்த பின்னர், பிரபல பாலிவுட் இயக்குநர் ராஜ் நிடிமோரை கடந்த ஆண்டு அவர் திருமணம் செய்து கொண்டார். சமீபத்தில் சமந்தா நடிப்பில் வெளியான 'மா இண்டி பங்காரம்' திரைப்படம் ரூ.100 கோடிக்கும் அதிகமாக வசூலித்தது.

கர்ப்பம்

கடந்த ஜூன் மாதம் 'மா இன்டி பங்காரம்' படத்தின் வெற்றி விழாவில் தனது கர்ப்பம் குறித்த மகிழ்ச்சியான செய்தியை சமந்தா பகிர்ந்துகொண்டார். குழந்தை பிறப்பை முன்னிட்டு ஏற்கெனவே ஒப்புக்கொண்ட பணிகளை முடித்துவிட்டு சிறிது காலம் நடிப்பிலிருந்து விலகியிருக்கப் போவதாகவும், பின்னர் மீண்டும் திரைத்துறைக்குத் திரும்புவதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.

ஆண் குழந்தை

இந்த நிலையில் சமந்தா - ராஜ் நிடிமோர் தம்பதிக்கு ஆண் குழந்தை நேற்று பிறந்துள்ளது. குழந்தைக்கு 'தேவ் நிடிமோர்' என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த மகிழ்ச்சியான செய்தியை, நெகிழ்ச்சியூட்டும் புகைப்படம் ஒன்றுடன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சமந்தா பகிர்ந்துள்ளார்.

அந்த பதிவில், "எங்கள் அழகான ஆண் குழந்தை 'தேவ் நிடிமோரு'. எங்கள் இதயங்கள் இதுவரை இல்லாத அளவுக்குப் பெருமகிழ்ச்சி அடைகின்றன" என்று தெரிவித்துள்ளார். சமந்தா - ராஜ் நிடிமோர் தம்பதிக்கு ரசிகர்கள் உள்ளிட்ட பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

SCROLL FOR NEXT