சினிமா செய்திகள்

பாலிவுட்டில் 10 ஆண்டுகளை நிறைவு செய்த நடிகை சான்யா மல்ஹோத்ரா

அமிர்கானின் ‘தங்கல்’ படத்தில் அறிமுகமான நடிகை சான்யா மல்ஹோத்ரா பாலிவுட்டில் 10 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார்.

டில்லியைச் சேர்ந்த நடிகை சான்யா மல்ஹோத்ரா 'டேன்ஸ் இந்தியா டேன்ஸ்' என்ற தொலைக்காட்சியில் நடனத்தின் மூலம் பிரபலமாகி பின்னர் நடிகையாக 2016ல் அமிர்கானின் ‘தங்கல்’ படத்தில் அறிமுகமானார்.பதாய் ஹோ, போட்டோகிராபி, சகுந்தலா தேவி, லூடோ, கதல், ஹிட், ஜவான், மிஸ்டர்ஸ், மீனாட்சி சுந்தரேஷ்வர் என பல படங்களில் நடித்து கவனம் பெற்றார். தமிழில் ‘தக் லைப்’ படத்தில் ‘ஜிக்குச்சா’ என்ற பாடலுக்கு நடனமாடியுள்ளார்.

மலையாளத்தில் கவனம்பெற்ற ‘தி கிரேட் இந்தியன் கிச்சன்’ படத்தின் ஹிந்தி ரீமேக்கில் சிறப்பாக நடித்திருந்தார். இவர் நடித்த கதல், ஜவான், சாம் பகதூர் படங்களுக்கு தேசிய விருது கிடைத்தது குறிப்பிடத்தக்கது. ராஜ்குமார் ராவுடன் நடித்துள்ள‘டோஸ்டர்’ என்ற படம் நெட்பிளிக்ஸில் சமீபத்தில் வெளியானது.

இந்த நிலையில், திரைத்துறையில் பத்தாண்டுகளை நிறைவு செய்தது குறித்து சான்யா மல்ஹோத்ரா அளித்த பேட்டியில் “பத்து ஆண்டுகள். நம்பவே முடியவில்லை. அற்புதமாக இருக்கிறது. எனக்குக் கிடைத்த வாய்ப்புகளுக்காக நான் நன்றியுணர்வுடன் இருக்கிறேன்” என கூறியுள்ளார்.

சன்யா மல்ஹோத்ரா தற்போது இயக்குநர் அனுராக் காஷ்யப் இயக்கும் ‘பந்தர்’ திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படம் மே 22-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. தற்போது, ‘சுந்தர் பூனம்’ படத்தில் நடித்து வருகிறார்.