கொச்சி,
நடிகை சன்யா மல்ஹோத்ரா தனது முதல் பிலிம் பேர் மேடை நிகழ்ச்சிக்காக மிகுந்த உற்சாகத்தில் உள்ளார். இன்று நடைபெற உள்ள 70வது பிலிம் பேர் விருதுகள் 2026 விழாவில் அவர் முதன்முறையாக மேடையேற உள்ளார்.
தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட தென்னிந்திய திரையுலகின் சிறப்பை கொண்டாடும் இந்த விழா கலை நிகழ்ச்சிகளுடன் நடைபெற உள்ளது. இதில் சன்யா மல்ஹோத்ரா உடன் நிதி அகர்வால், பிரணிதா சுபாஷ், அபர்ணா பாலமுரளி, த்ரிஷா ஷெட்டி போன்றோர் சிறப்பு நடன நிகழ்ச்சிகளை வழங்க உள்ளனர்.
இதுகுறித்து சன்யா மல்ஹோத்ரா கூறுகையில்:
“70வது பிலிம் பேர் விருதுகள் 2026 விழாவில் மேடையேறுவது எனக்கு மிகவும் சிறப்பு வாய்ந்தது. குறிப்பாக, இது எனது முதல் பிலிம் பேர் மேடை நிகழ்ச்சி என்பதால் மிகவும் உற்சாகமாக இருக்கிறது. தென்னிந்திய சினிமாவின் மேன்மையை கொண்டாடும் இந்த விழாவில் பங்கேற்பது பெருமை. கொச்சியில் நடைபெறும் இந்த மறக்க முடியாத நிகழ்வுக்காக ஆவலுடன் காத்திருக்கிறேன்” என்றார்.
சன்யா மல்ஹோத்ரா தற்போது இயக்குநர் அனுராக் காஷ்யப் இயக்கும் “பந்தர்”திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்த படம் இந்தாண்டு மே 22-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.