நடிகை சாரா அர்ஜுன் முதல்முறையாக பேஷன் ஷோவில் பங்கேற்று ரேம்ப் வாக் செய்து பலரையும் வியக்க வைத்துள்ளார்.
தெய்வத் திருமகள், சைவம் திரைப்படங்களின் மூலம் தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக கவனத்தைப் பெற்றவர் நடிகை சாரா அர்ஜுன். மணிரத்னம் இயக்கிய, ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தில் இளவயது ஐஸ்வர்யா ராய் கதாபாத்திரத்திலும் நடித்து கவனம் ஈர்த்தார்.
குழந்தை நட்சத்திரமாகவே பார்க்கப்பட்ட சாரா, அண்மையில் வெளியாகி வசூல் வேட்டையை நிகழ்த்திய ‘துரந்தர்’ திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகி பலருக்கும் ஆச்சரியம் அளித்தார்.
இந்த நிலையில், பேஷன் டிசைன் கவுன்சில் ஆஃப் இந்தியா நடத்திய லேக்மி பேஷன் வீக்கில் சாரா அர்ஜுன் கலந்து கொண்டுள்ளார். இதில் ஆடை வடிவமைப்பாளர் அனுஸ்ரீ ரெட்டியின் ஆடைகளை அணிந்து சாரா அர்ஜுன் வலம் வந்தார்.
தாஜ் பேலஸ் ஹோட்டலில் நடைபெற்ற இந்த பேஷன் காலாவின் நான்காவது நாளில் அனுஸ்ரீ ரெட்டியின் ‘மாயா’ என்ற ஆடையை சாரா அர்ஜுன் அணிந்திருந்தார்.
லெஹெங்கா பாணியில் உருவாக்கப்பட்டிருந்த இந்த நீல நிற ஆடையில் வெள்ளை நிற பூக்களால் அழகாக சித்திரப்பின்னல் செய்யப்பட்டிருந்தது. பெபுலம் பாணியில் உருவாக்கப்பட்டிருந்த இந்த ஆடையில் சாரா அர்ஜுன் அழகாக இருந்தார்.