சர்தார், லப்பர் பந்து உள்ளிட்ட பல வெற்றிப்படங்களை கொடுத்த பிரின்ஸ் பிக்சர்ஸ் , மேவரிக் மூவிஸ் இணைந்து மிகப்பெரிய பட்ஜெட்டில் தயாரித்துள்ள ‘மிஸ்டர் எக்ஸ்’ திரைப்படம் வரும் 17ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. ஆர்யா கதாநாயகனாக நடிக்க, கவுதம் கார்த்திக் சரத்குமார், மஞ்சு வாரியர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இவர்களுடன், அனகா, அதுல்யா ரவி, ரைசா வில்சன்,காளி வெங்கட் மற்றும் ஜெயப்ரகாஷ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
எப்ஐஆர் படத்தை இயக்கிய மனு ஆனந்த் இந்தப்படத்தின் கதையை எழுதி இயக்கியுள்ளார். கனா, நெஞ்சுக்கு நீதி படங்களுக்கு இசையமைத்த திபு நிபுணன் தாமஸ் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். ஆக்சன் திரில்லராக உருவாகியுள்ள இப்படத்தின் அதிரடி சண்டைக்காட்சிகள் இந்தியாவில் ராஜஸ்தான் தூத்துக்குடி குலுமணாலி மும்பை பாண்டிச்சேரி போன்ற இடங்களிலும் மற்றும் இப்படத்தின் வேறு சில முக்கிய காட்சிகள் அசர்பைஜான் படமாக்கப்பட்டுள்ளன.
‘மிஸ்டர் எக்ஸ்’ படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது. இப்படம் வருகிற 17ந் தேதி தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாகிறது.
இந்நிலையில், ‘மிஸ்டர் எக்ஸ்’ படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழாவில் கவுதம் ராம் கார்த்திக் சரத்குமாரை பாராட்டி பேசியுள்ளார். “இரண்டு ஹீரோயின்கள் கதாபாத்திரம் நடிக்கும்போது தயக்கம் இருக்கும். ஆர்யா அவரை நம்பி தைரியமாக நடித்தார். எனக்கும் ஆதரவு கொடுத்தார்.மஞ்சு வாரியருக்கும் எனக்கும் காம்பினேஷன் இல்லை என்பது எனக்கு வருத்தமாக இருந்தது. சரத்குமார் திரைத் துறையில் எனக்கு அப்பா மாதிரி சில்வா மாஸ்டர் கொடுத்த தைரியத்தில் இந்த படத்தில் நானே சுயமாக சண்டை செய்துள்ளேன்.இயக்குனர் மனு ஆனந்த் என்னை நம்பி இந்த கதாபாத்திரம் கொடுத்தார்” என்றார்.