சென்னை,
கடந்த 2022ம் ஆண்டில் ஆண்ட்ரூ லூயிஸ் இயக்கத்தில் அமேசான் ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியான வெப் தொடர் 'வதந்தி'. இதில் எஸ்.ஜே. சூர்யா, லைலா, சஞ்சனா, நாசர் ஆகியோர் இணைந்து நடித்திருந்தனர். இந்த வெப் தொடருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.
முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து வதந்தி தொடரின் 2ம் பாகத்தை உருவாகியுள்ளது. கிரைம் திரில்லர் ஜானரில் உருவாகியுள்ள வதந்தி 2 தொடரை வால் வாட்சர் பிலிம்ஸ் சார்பில் எஸ் குஹபிரியா, எஸ் நந்தகுமார் மற்றும் கவுதம் செல்வராஜ் இணைந்து தயாரித்துள்ளனர். முதல் சீசனை இயக்கிய ஆன்ட்ரூ லூயிஸ் இந்த சீசனையும் இயக்கி உள்ளார்.
இந்த நிலையில், "வதந்தி சீசன் 2" தொடரின் டீசர் வீடியோ வெளியாகி உள்ளது. இந்த தொடரில் சசிகுமார் மூசா ராசா என்ற பெயருடன் முதல் முறையாக போலீசாக நடித்திருக்கிறார். தற்போது அறிமுக வீடியோ வெளியாகி இருக்கும் நிலையில், "வதந்தி சீசன் 2" வெளியீட்டு தேதி குறித்து இதுவரை எந்த தகவலும் இல்லை. விரைவில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.