சினிமா செய்திகள்

சதீஷ் நடித்த “பத்து நாள் ராஜா” படத்தின் டீசர் வெளியானது

குரு சரவணன் இயக்கத்தில் சதீஷ் நடிக்கும் ‘பத்து நாள் ராஜா’ திரைப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்கிறார்.

குரு சரவணன் இயக்கத்தில் சதீஷ் நடிக்கும் ‘பத்து நாள் ராஜா’ திரைப்படத்தின் டீசர் வெளியானது.

தமிழ் சினிமாவில் முன்னணி நகைச்சுவை நடிகர்களில் ஒருவராக இருப்பவர் சதீஷ். இவர் தனது டைம்மிங் காமெடி மூலம் பிரபலமானார். இவர் தற்போது, நகைச்சுவை கதாபாத்திரங்களில் மட்டுமல்லாமல், கதாநாயகனாகவும் நடித்து வருகிறார்.

‘பத்து நாள் ராஜா’

சதீஷ், ஆதி சாய்குமார், கருட ராம் உள்ளிட்டோர் நடிப்பில் உருவான திரைப்படம் ‘பத்து நாள் ராஜா’. இப்படத்தை குரு சரவணன் இயக்கியுள்ளார். மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவில் ஜிப்ராம் இசையமைக்கும் இப்படம் விரைவில் வெளியாகவுள்ளது. நடிகை சரண்யா முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். இந்தபடத்தினை எஸ்ஜிஎஸ் நிறுவனம் சார்பில் ஜி சுரேஷ்குமார் தயாரித்துள்ளார்.

கடன் கொடுக்கும் செயலிகளை நடத்துபவர்களுக்கும் கடன் வாங்கும் நபர்களுக்கும் இடையேயான திரைப்படமாக இது உருவாகியுள்ளது.

டீசர் வெளியீடு

குரு சரவணன் இயக்கத்தில் சதீஷ் நடிக்கும் ‘பத்து நாள் ராஜா’ திரைப்படத்தின் டீசர் வெளியானது.

SCROLL FOR NEXT