இயக்குனர் நரேந்திர மூர்த்தியின் கிரைம் திரில்லர் படமான ‘4 விண்டோஸ்’படத்தின் டீசர் வெளியாகி உள்ளது. இளையராஜா சேகர் தயாரித்துள்ள இப்படத்தில் வெற்றி, சத்யராஜ், சின்னி ஜெயந்த், எம்.எஸ்.பாஸ்கர், கோவை சரளா, பிராத்தனா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். மேலும் கூல் சுரேஷ், சச்சு, சேது, மாறன், சரண், வையாபுரி, டிஎம் கார்த்திக், ஸ்ரீநிக்தா, அய்ரா கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படத்திற்கு ஜெரார்ட் பெலிக்ஸ் இசையமைத்துள்ளார். பாடல் வரிகளை கு. கார்த்திக் எழுதியுள்ளார்.
சமீபத்தில் ‘4 விண்டோஸ்’ படத்தின் டீசர் வெளியானது.. டீசரை பார்க்கும்போது ஒரே இரவில் நடக்கும் நிகழ்வுகளைச் சுற்றியே சுழல்கிறது என்ற தோற்றத்தை அளிக்கிறது. படத்தின் இறுதி கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், ‘4 விண்டோஸ்’ படத்தின் ‘தம்மாசி..’ எனத் தொடங்கும் முதல் பாடல் வெளியாகியுள்ளது. இந்தப் பாடலை பாடலாசிரியர் கு . கார்த்திக் மற்றும் கானா வினோத் ஆகியோர் இணைந்து எழுத ,பின்னணி பாடகர்கள் கானா வினோத் மற்றும் ஜெரார்ட் பிலிக்ஸ் ஆகியோர் இணைந்து பாடியிருக்கிறார்கள். துள்ளல் இசை பாணியில் தயாராகி இருக்கும் இந்த பாடல் இணைய தலைமுறை ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.