சினிமா செய்திகள்

செல்பி எடுக்கும் போது நடிகையின் கன்னத்தை கிள்ளிய ரசிகரால் பரபரப்பு

ரச்சிதா ராம், நேற்று தனது 34-வது பிறந்தநாளை கொண்டாடினார். இதையொட்டி அவர் ரசிகர்களை சந்தித்து வாழ்த்து பெற்றார்.

பிரபல கன்னட நடிகையான ரச்சிதா ராம், தமிழில் ரஜினிகாந்தின் 'கூலி' படத்தில் நடித்து கவனம் ஈர்த்தார். சாதுவான அவர் திடீரென வில்லியாக உருமாறி ரசிகர்களை மிரட்டினார். தற்போது கன்னடம் மற்றும் தெலுங்கு படங்களில் பிசியாக நடித்து வரும் ரச்சிதா ராம், நேற்று தனது 34-வது பிறந்தநாளை கொண்டாடினார். இதையொட்டி அவர் ரசிகர்களை சந்தித்து வாழ்த்து பெற்றார்.

அப்போது குறும்புக்கார ரசிகர் ஒருவர் ரச்சிதா ராம் அருகே வந்து செல்போனில் 'செல்பி' எடுக்கத் தொடங்கினார். நடிகையும் சிரித்த முகமாக 'போஸ்' கொடுத்தார். 'செல்பி' எடுத்த பின்னர், அந்த ரசிகர் திடீரென ரச்சிதா ராமின் கன்னத்தை கிள்ளி பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார். இதனால் நடிகை பதறிப் போனார். இந்த சம்பவம் லேசான பரபரப்பை ஏற்படுத்தியது.

அதனைத் தொடர்ந்து ஒருவித எச்சரிக்கை உணர்வுடனேயே அவர் ரசிகர்களை அணுகினார். நடிகையின் கன்னத்தை ரசிகர் கிள்ளிச் சென்ற காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகின்றன.

SCROLL FOR NEXT