சினிமா செய்திகள்

துபா​யில் நடக்க இருந்த ஷாருக்கானின் “கிங்” படத்தின் படப்பிடிப்பு ரத்து

சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் ஷாருக்கான், தீபிகா படுகோன் நடிக்கும் ‘கிங்’ படம் டிசம்பர் 24ம் தேதி வெளியாக உள்ளது.

இந்தி பட உலகில் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் ஷாருக்கான். இவர் தற்போது வார் மற்றும் பதான் படங்களை இயக்கி புகழ் பெற்ற, சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் கிங் என்ற படத்தில் நடித்து வருகிறார். இதில் அவரது மகள் சுஹானா கான் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இதில் அனில் கபூர், ராணி முகர்​ஜி, தீபிகா படு​கோன், சுஹானா கான், அபிஷேக் பச்​சன் உள்பட பலர் நடிக்​கின்​றனர்.

ஷாருக்கானுக்கு ஜோடியாக தீபிகா படுகோன் நடிக்கிறார். அனிருத் இசையமைத்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் ஏற்கனவே துவங்கி நடைபெற்று வருகிறது. ஷாருக்கானின் பிறந்தநாளை முன்னிட்டு கிங் படத்தின் டைட்டில் டீசர் வெளியானது.

இப்​படத்​துக்​காக பாலை​வனத்​தில் அனில் கபூர், சுஹானா கான் பங்​கேற்​கும் ஆக்சன் காட்​சியை படமாக்க இருந்​தனர். வரும் 9-ம் தேதி முதல், ஒரு வார காலம் அங்கு படப்​பிடிப்பை நடத்த முடிவு செய்​திருந்​தனர். ஐக்​கிய அரசு அமீரகம் அதற்​கான அனு​ம​தியை வழங்கி இருந்​தது.

இந்நிலையில், மத்​திய கிழக்​கில் நடந்து வரும் போர் பதற்​றம் காரண​மாக இப்போது அத்​திட்​டத்தை படக்​குழு ரத்து செய்​து​விட்​டது. அக்காட்சிகளை மும்​பை​யின் விலே பார்லே பகு​தி​யில் செட் அமைத்து படமாக்க உள்​ள​தாக தெரி​வித்​துள்​ளனர். இப்​படம் டிசம்பர் 24-ம் தேதி வெளி​யாக இருக்​கிறது.