சினிமா செய்திகள்

சண்முக பாண்டியன் நடிக்கும் புதிய படத்தின் டைட்டில் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியீடு

விஜயகாந்த் மகன் சண்முக பாண்டியன் நடிக்கும் ‘வாணவேடிக்கை’ படத்தின் படப்பிடிப்பு தொடங்கியுள்ளதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

சண்முக பாண்டியனின் ‘வாணவேடிக்கை’ படத்தின் டைட்டில் கிளிம்ப்ஸ் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.

மறைந்த நடிகர், தேமுதிக தலைவர் விஜயகாந்தின் இளைய மகன் சண்முக பாண்டியன் திரைப்படங்களில் நாயகனாக நடித்து வருகிறார். இவரது நடிப்பில் முதல் படமாக ‘சகாப்தம்’ வெளியானது. பின்னர் ‘மதுரை வீரன்’ என்ற படத்தில் நடித்தார். இவர் நடிப்பில் வெளியான ‘படை தலைவன்’ திரைப்படம் கலவையான விமர்சனங்களையே பெற்றது. இயக்குநர் பொன்ராம் இயக்கத்தில் இவர் நடித்த ‘கொம்புசீவி’ திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது.

திரு இயக்கத்தில் சண்முக பாண்டியன் நடிக்கும் படத்துக்கு ‘வாணவேடிக்கை’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. கேப்டன் சினி கிரியேஷன்ஸ் சார்பில் எல்கே சுதீஷ் இந்தப் படத்தைத் தயாரிக்கிறார். சென்னையில் படமாக்கப்பட உள்ள இப்படத்தின் துவக்க விழா இன்று பூஜையுடன் நடைபெற்றது. படப்பிடிப்பு நிகழ்வில் பிரேமலதா விஜயகாந்த் கேமரா ஆன் செய்ய, தயாரிப்பாளர் எல் கே சுதீஷ், பூர்ண ஜோதி கிளாப் போர்டு அடிக்க முதல் காட்சி படமாக்கப்பட்டது. இயக்குநர்கள் சுசீந்திரன், ஜெயம் ராஜா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டார்கள்.

இதில் சிறப்பு விருந்தினர்களாக, இயக்குனர் சுசீந்திரன், ஜெயம் ராஜா ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் சரவணன், இயக்குனர் தமிழ், அம்மா கிரியேஷன்ஸ் சிவா, கலை இயக்குனர் கிரண், ஜெயப்பிரகாஷ், ஸ்டில்ஸ் பாண்டியன், கும்கி அஸ்வின், சாரா, படூர் ரமேஷ் மற்றும் பலர் நடிக்கிறார்கள்.

இயக்குநர் திரு, ‘சத்யம்’ பட இயக்குனர் ஏ.ராஜசேகரிடம் உதவி இயக்குநராக பணியாற்றினார். பின்னர், 2010ம் ஆண்டு விஷால் நடிப்பில் வெளியான ‘தீராத விளையாட்டுப் பிள்ளை’ படத்தின் மூலம் திரு இயக்குனராக அறிமுகமானார். தொடர்ந்து, 2013ம் ஆண்டு மீண்டும் விஷாலுடன் சேர்ந்து ‘சமர்’, 2014ம் ஆண்டு ‘நான் சிகப்பு மனிதன்’ ஆகிய இரண்டு படங்களை இயக்கினர். தொடர்ந்து 2018ம் ஆண்டு ‘திரு.சந்திரமவுலி’, 2019ம் ஆண்டு ‘சாணக்யா’ ஆகிய படங்களையும் இயக்கினார்.

இந்தப் படத்துக்கு சாம் சி.எஸ் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு முழுக்க முழுக்க சென்னையில் நடைபெற உள்ளது. இப்படத்தைப் பற்றி இயக்குனர் திரு கூறுகையில், “இதுவரை நீங்கள் பார்த்திடாத சண்முக பாண்டியன் விஜயகாந்தை இந்த படத்தில் பார்ப்பீர்கள். இப்படம் தந்தைக்கு மகனுக்குமான உணர்வை சொல்லும் ஒரு அழகிய கமர்சியல் படம்.” என தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், ‘வாணவேடிக்கை’ படத்தின் டைட்டில் கிளிம்ப்ஸ் வீடியோவை இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் வெளியிட்டார்.