சினிமா செய்திகள்

ராகுல் காந்தியை திருமணம் செய்து கொள்ள ரெடி...! ஆனால் ஒரு நிபந்தனை...! - ஷெர்லின் சோப்ரா

ஷெர்லின் சோப்ரா ரசிகர்களுடன் செல்பி எடுத்தபோது ரசிகர் ஒருவர் ராகுல் காந்தியை திருமணம் செய்து கொள்வீர்களா? என்று நடிகையிடம் கேலியாக கேட்டார்.

தினத்தந்தி

மும்பை,

தமிழில் யுனிவர்சிட்டி படத்தில் நடித்தவர் ஷெர்லின் சோப்ரா. இந்தியில் பிரபல நடிகையாக இருக்கிறார். நாள்தோறும் கிறங்கடிக்கும் கவர்ச்சிப்படங்களை இணையத்தில் வெளியிட்டு இவர் கட்டுக்கடங்காத இளம் ரசிகர் பட்டாளத்தை தன்பக்கம் ஈர்த்து வைத்திருக்கிறார்.

ஷெர்லின் ஷோப்ரா ரசிகர்களுக்கு மகிழ்ச்சியுடன் போஸ் கொடுப்பது மட்டுமல்லாமல் அவர்களுடன் நெருங்கி செல்பி எடுத்தும் மகிழ்விக்கிறார்.

சமீபத்தில் ரசிகர் ஒருவர் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை திருமணம் செய்து கொள்வீர்களா? என கேட்டார்.  இந்த கேள்விக்கு ஷெர்லின் சாதகமாக பதிலளித்து ஒரு நிபந்தனையை வைத்தார். ஷெர்லின் சோப்ராவின் இந்த பதில் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

ரசிகர்களுடன் செல்பி எடுப்பதில் மும்முரமாக இருந்தபோது, ரசிகர் ஒருவர் ராகுல் காந்தியை திருமணம் செய்து கொள்வீர்களா? என்று கேலியாக கேட்டார். அதற்கு பதிலளித்த ஷெர்லின், "ஆம், ஏன் கூடாது.  ஆனால் திருமணத்திற்குப் பிறகு எனது குடும்பப்பெயரை மாற்றிக்கொள்ள மாட்டேன் என்று கூறினார்.

View this post on Instagram

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது