சினிமா செய்திகள்

“எல்லாம் சரியான நேரத்தில் தானாகவே நடக்கும்” - எதைப்பற்றி கூறினார் சோபிதா? - வைரலாகும் கருத்து

சோபிதா தெரிவித்துள்ள இந்த கருத்துகள் தற்போது கவனம் பெற்று வருகின்றன.

சென்னை,

பிரபல நடிகை சோபிதா துலிபாலா, குடும்ப வாழ்க்கை குறித்த தனது எண்ணங்களை பகிர்ந்துள்ளார்.

குடும்ப வாழ்க்கை குறித்து சோபிதா

தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான நாக சைதன்யாவைத் திருமணம் செய்துகொண்ட சோபிதா துலிபாலா, திருமணத்திற்கு பிறகான குடும்ப வாழ்க்கை குறித்த தனது பார்வையை சமீபத்திய பேட்டியில் பகிர்ந்துள்ளார்.

தானாகவே நடக்கும்

இதுகுறித்து அவர் கூறுகையில், “எனக்கு எப்போதுமே குடும்ப வாழ்க்கையை தொடங்க வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. ஆனால், அதைப் பற்றி அதிகமாக யோசித்து கவலைப்படுவதில்லை. நடக்க வேண்டியவை சரியான நேரத்தில் தானாகவே நடக்கும் என்று நம்புகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

சோபிதா தெரிவித்துள்ள இந்த கருத்துகள் தற்போது கவனம் பெற்று வருகின்றன.

SCROLL FOR NEXT