துபாய்,
‘சீன்’ திரைப்படத்தைப் பார்த்த பிறகு, தான் தொடர்ந்து தமிழ் சினிமாவில் நடிக்க வேண்டுமா அல்லது மலையாளத் திரைப்படங்களிலேயே கவனம் செலுத்த வேண்டுமா என்பதை ரசிகர்கள்தான் தெரிவிக்க வேண்டும் என்ற கருத்தையும் நஸ்லென் முன்வைத்துள்ளார்.
மலையாளத்தில் இளம் நடிகராக ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர் நஸ்லென். ‘பிரேமலு’ உள்ளிட்ட படங்கள் மூலம் பிரபலமான இவர், தற்போது இயக்குநர் ஜித்து மாதவன் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் ‘சீன்’ திரைப்படம் மூலம் தமிழில் அறிமுகமாகிறார். இந்தப் படத்தில் சூர்யா காவல்துறை அதிகாரியாக நடிக்க, நஸ்லென் ’ஈஸ்வரன்’ என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இதுவரை நகைச்சுவை மற்றும் காதல் கதைகளில் நடித்து வந்த இவர், இப்படத்தில் வித்தியாசமான எதிர்மறைக் கதாபாத்திரத்தில் தோன்றுவது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
சமீபத்தில் துபாயில் நடைபெற்ற ‘சீன்’ படத்தின் விளம்பர நிகழ்ச்சியில் பேசிய நஸ்லென், தனது முதல் தமிழ்ப் படம் என்பதால் சற்று பதற்றமாக இருக்கிறது. சூர்யா, நஸ்ரியா மற்றும் இயக்குநர் ஜித்து மாதவனுடன் இணைந்து பணியாற்றுவது மகிழ்ச்சியளிப்பதாகவும் கூறினார். மேலும், படத்தைப் பார்த்துவிட்டு தன்னுடைய நடிப்பில் ஏதேனும் தவறுகள் இருந்தால் சுட்டிக்காட்டுமாறு ரசிகர்களைக் கேட்டுக்கொண்டார். அவற்றைத் திருத்திக்கொள்ளத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்.
‘சீன்’ திரைப்படத்தைப் பார்த்த பிறகு, தான் தொடர்ந்து தமிழ் சினிமாவில் நடிக்க வேண்டுமா அல்லது மலையாளத் திரைப்படங்களிலேயே கவனம் செலுத்த வேண்டுமா என்பதை ரசிகர்கள்தான் தெரிவிக்க வேண்டும் என்ற கருத்தையும் நஸ்லென் முன்வைத்துள்ளார்.
அவரது இந்த வெளிப்படையான பேச்சு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. ‘சீன்’ திரைப்படம் நஸ்லெனுக்கு தமிழில் புதிய வாய்ப்புகளை உருவாக்குமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.