சினிமா செய்திகள்

சித்தார்த்தின் “மேரேஜ் ஸ்டோரி” படத்தின் டீசர் அப்டேட்

‘அதோமுகம்’ இயக்கிய சுனில் தேவ் அவரது அடுத்த படமாக ‘மேரேஜ் ஸ்டோரி’ திரைப்படத்தை இயக்கியுள்ளார்.

சுனில் தேவ் இயக்கத்தில் சித்தார்த், ஷபானா நடிக்கும் ‘மேரேஜ் ஸ்டோரி’படத்தின் டீசர் ரிலீஸ் தேதியை படக்குழு வெளியிட்டுள்ளது.

சுனில் தேவ் இயக்கத்தில் உருவாகி கடந்த ஆண்டு வெளியானது ‘அதோமுகம்’ திரைப்படம். இப்படம் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. திரையரங்கில் போதிய வரவேற்பை பெறவில்லை என்றாலும், திரைப்படம் ஓடிடியில் வெளியான பிறகு பலரும் இப்படத்தை பாராட்டி இணையத்தில் பதிவிட்டனர்.

இந்த படத்தின் மூலம், சித்தார்த் மற்றும் சைத்தன்யா நாயகன் நாயகியாக அறிமுகமானார்கள். பலரும் ‘அதோமுகம்’ படத்தின் இரண்டாம் பாகத்திற்காக காத்துக் கொண்டு இருக்கின்றனர்.

‘மேரேஜ் ஸ்டோரி’

‘அதோமுகம்’ இயக்கிய சுனில் தேவ் அவரது அடுத்த படமாக ‘மேரேஜ் ஸ்டோரி’ திரைப்படத்தை இயக்கியுள்ளார். படத்தை ரீல் பெட்டி நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படத்தில் அதோமுகம் நாயகன் சித்தார்த் கதாநாயகனாக நடித்துள்ளார். இவருடன் ஷபானா, அமுதவாணன், நாசர், நிழல்கள் ரவி, அருள்தாஸ் மற்றும் தீபிகா வெங்கடாசலம் நடித்துள்ளனர். இது நட்பு, காதல், குடும்ப உறவுகள் மற்றும் நகைச்சுவை நிறைந்த ஒரு முழுமையான பேமிலி எண்டர்டெய்னர் திரைப்படமாகும்.

படத்தின் ஒளிப்பதிவை தமிழ் செல்வன், இசை சரண் ராகவன், படத்தொகுப்பு - தமிழ் அரசன் மேற்கொள்கின்றனர். சமீபத்தில் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டது.

படத்தின் டீசர் அப்டேட்

இந்நிலையில், சித்தார்த்தின் ‘மேரேஜ் ஸ்டோரி’ படத்தின் டீசர் வரும் நவம்பர் 12ம் தேதி வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

படத்தின் ரிலீஸ் அப்டேட்

சித்தார்த்தின் ‘மேரேஜ் ஸ்டோரி’ படம் நவம்பரில் வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

SCROLL FOR NEXT