சினிமா செய்திகள்

சிம்பு படப்பிடிப்புக்கு 1 மணி நேரத்திற்கு முன்பாகவே வந்துவிடுவார் - கலைப்புலி எஸ் தாணு

சிலம்பரசனின் ‘அரசன்’ திரைப்படத்தில் ஆண்ட்ரியா, பிரியங்கா மோகன், யோகி பாபு, சமுத்திரகனி, விக்ராந்த், கிஷோர், அமீர் உள்ளிட்ட பலரும் நடித்து வருகின்றனர்.

சென்னை,

வெற்றிமாறன் இயக்கத்தில், சிலம்பரசன் நடிப்பில் உருவாகி வரும் ‘அரசன்’ திரைப்படம் கோலிவுட்டில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது. கலைபுலி தாணு தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

வட சென்னை பின்னணியில் கேங்க்ஸ்டர் கதைக்களத்தில் உருவாகி வரும் இந்த படத்தில் விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மேலும் ஆண்ட்ரியா ஜெரெமையா, பிரியங்கா மோகன், யோகி பாபு, சமுத்திரகனி, விக்ராந்த், கிஷோர், அமீர் உள்ளிட்ட பலரும் நடித்து வருகின்றனர்.

இந்த நிலையில், தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு நடிகர் சிம்பு குறித்த பேட்டி அளித்துள்ளார். அதில் “சிம்பு முதலில் தேசிங் பெரியசாமியின் இயக்கத்தில் உருவாகும் படத்திற்காக தலைமுடியை வளர்த்துவந்தார். ஆனால் அரசன் பட கதையை கேட்டதும் அவர், அந்த படத்தை பின்னரும் தள்ளிவைத்துவிட்டார். அரசன் படத்திற்காக தனது தோற்றத்தை மாற்றிக்கொண்டார். இப்படத்தின் கதாபாத்திரமாகவே வாழ தொடங்கிவிட்டார். அதே நேரத்தில், அவருக்கு எவ்வளவு நேரம் படப்பிடிப்பு நேரம் ஒதுக்கப்பட்டாலும், அவர் அதற்கு ஒரு மணிநேரம் முன்னதாகவே வந்துவிடுவார். அவர் ஒருபோதும் ஷூட்டிங்கிற்கு தாமதமாக வந்ததில்லை. அவரை ஏன் ஷூட்டிங்கிற்கு தாமதமாக வருகிறார் என விமர்சிக்கப்படுகிறார் என எனக்கு தெரியவில்லை. அரசன் படத்தில் இசையமைக்க சிம்பு தான் அனிருத்திடம் கேட்டுக்கொண்டார். சமீபத்தில் வெற்றிமாறன் அரசன் பட காட்சி ஒன்றை என்னிடம் காட்டினார். அதில் எஸ்.டி.ஆர் நடந்துவரும் ஒரு சீன், அவர் லட்டு போலவே இனிமையாக தெரிந்தார்” என்று கூறியுள்ளார்.