சினிமா செய்திகள்

சிம்புவின் பயணம்: காலவரிசை 2021ன் டிரெய்லர் வெளியீடு

சிம்புவின் ‘ஜார்னி ஆப் அட்மேன் டைம்லைன் 2021’ என்ற பயணத்தின் டிரெய்லர் வீடியோ வெளியாகியுள்ளது.

வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் சிம்பு நடிப்பில் கடந்த 2021ம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘மாநாடு’. இந்த திரைப்படம் தொடர் தோல்வி படங்களால் துவண்டு இருந்த சிம்புவிற்கு திருப்புமுனையாக அமைந்தது. இப்படத்தில் சிம்புவுடன் கல்யாணி பிரியதர்ஷன், எஸ்.ஜே.சூர்யா, மனோஜ் பாரதிராஜா, பிரேம்ஜி, ஒய்.ஜி.மகேந்திரன், எஸ்.ஏ.சந்திரசேகர் உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள். டைம் லூப் கதையம்சம் கொண்ட இந்தத் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றது. வசூல் ரீதியாகவும் இந்த படம் மிகப்பெரிய சாதனை படைத்தது. மேலும் இந்த படத்தில் சிம்பு மற்றும் எஸ்.ஜே.சூர்யாவின் நடிப்பு பலரின் பாராட்டுகளை பெற்றது. இத்திரைப்படம் வெளியாகி 2 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன.

நடிகர் சிம்பு கடந்த 2020க்கு முன்பாக சில ஆண்டுகள் படங்கள் நடிக்காமலும் அதிக எடையுடனும் இருந்தார். அந்தக் கடினமான காலங்களைக் கடந்து 2021ல் கம்பேக் அளித்தார். இந்தப் பயணத்தை முன்னிட்டு இதுவரை 2020ல் நடந்த மாற்றங்கள் குறித்து நான்கு எபிசோடுகள் அடங்கிய வீடியோவை தனது யூடியூப் பக்கத்தில் சிம்பு வெளியிட்டுள்ளார்.

தற்போது, 2021ம் ஆண்டு எடுத்த வீடியோக்களின் தொகுப்பை டிரெய்லராக வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவில் பெரும்பாலும் ‘மாநாடு’ படத்தின் படப்பிடிப்பில் அவர் அனுபவித்த கஷ்டங்கள், இன்பம், உடல் மற்றும் மன ரீதியான மாற்றங்கள் குறித்து பேசியுள்ளார்.

சிம்பு , உடற்பயிற்சி, விளையாட்டு, கடினமான உணவுக் கட்டுப்பாடு, ஒழுக்கத்தின் மூலமாக தனது உடலை கட்டுக்குள் கொண்டுவந்தார். தற்போது, சிம்பு ‘அரசன்’ படத்தில் வெற்றிமாறன் படத்தில் நடித்து வருகிறார். வட சென்னை உலகில் உருவாகும் ‘அரசன்’ திரைப்படம் மீது மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்தப் படம் தீபாவளிக்கு வெளியாகலாம் என எதிர்பார்க்கபடுகிறது.

SCROLL FOR NEXT