நடிகர் ரவி மோகன் மனைவி ஆர்த்தி தொடர்ந்த அவதூறு வழக்கில், பாடகி கெனிஷா நேரில் ஆஜராக கோர்ட் உத்தரவிடப்பட்டுள்ளது.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான ரவிமோகன் தனது காதல் மனைவி ஆர்த்தியை கடந்த 2024ம் ஆண்டு விவகாரத்து செய்வதாக அறிவித்தார். தொடர்ந்து ஆர்த்தி மற்றும் அவரது குடும்பத்தினர் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். பாடகி கெனிஷாவுடன் இருந்த உறவுதான் இந்த விவகாரத்துக்கு காரணமாக சொல்லப்பட்டது. கெனிஷாவும் ரவிமோகனை விட்டு விலகுவதாக அறிவித்திருந்தார்.
இதற்கிடையில் சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் இவர்களின் விவாகரத்து வழக்கு நிலுவையில் உள்ளது. இந்த வழக்கில் சமீபத்தில் இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதன்படி ஆர்த்தி தரப்பில் ரூ.40 லட்சம் கோரப்பட்ட நிலையில் அதனை நிராகரித்த நீதிமன்றம் மாதம் ரூ.3 லட்சம் ஜீவனாம்சம் வழங்க வேண்டும் என தெரிவித்தது. அதுமட்டுமல்லாமல் மகன்கள் ஆரவ் மற்றும் அயானை எவ்வித தடையுமின்றி சந்திக்கலாம் எனவும் உத்தரவிடப்பட்டது.
தன்னை குறிவைத்து சமூக வலைதளங்களில் தொடர்ந்து விமர்சனங்கள் மற்றும் எதிர்மறை கருத்துகள் பரவி வந்ததால் மனவேதனை அடைந்த கெனிஷா பிரான்சிஸ், கடந்த மே மாதம் சமூக வலைதளங்களில் இருந்து முழுமையாக விலகுவதாக உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டார்.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு கெனிஷா பிரான்சிஸ் மீண்டும் இன்ஸ்டாகிராமில் கம்பேக் கொடுத்துள்ளார். தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புதிய பதிவு ஒன்றை பகிர்ந்து, சமூக வலைதளங்களுக்கு திரும்பியிருப்பதை அறிவித்திருந்தார்.
ரவி மோகன் மற்றும் ஆர்த்தி இடையிலான விவாகரத்து வழக்கு நிலுவையில் உள்ள சூழலில், தன்னைப் பற்றி சமூக வலைதளங்களில் அவதூறு கருத்துகள் பரப்பப்படுவதாகக் கூறி ஆர்த்தி நீதிமன்றத்தை நாடியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம், இந்த வழக்கில் பதிலளிக்க பாடகி கெனிஷாவிற்கு உத்தரவிட்டிருந்தது. அதே நேரத்தில், விவாகரத்து வழக்கு இன்னும் நிலுவையில் உள்ளதை சுட்டிக்காட்டி, ஆர்த்தி குறித்து அவதூறு பேசவும் தடைவிதித்திருந்தது.
ரவிமோகன் இயக்கி தயாரிக்கும் 'ஆன் ஆர்டினரி மேன்' படத்திற்கு பாடகி கெனிஷா பிரான்சிஸ் இசையமைக்க உள்ளதாக ரவிமோகன் ஸ்டியோஸ் அதிகாரப்பூர்வ அறிவித்துருந்தது. படத்தின் இரண்டு பாடல்கள் வெளியாகி வைரலானது.
தன்னைப் பற்றி அவதூறாக பேசத் தடை விதிக்கவும், ஏற்கெனவே தன்னைப் பற்றி கெனிஷா வெளியிட்டுள்ள பதிவுகளை நீக்கவும், தனக்கு நஷ்ட ஈடாக ரூ.1 கோடி வழங்கவும் உத்தரவிட வேண்டும் என ஆர்த்தி வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்நிலையில், நடிகர் ரவி மோகன் மனைவி ஆர்த்தி தொடர்ந்த அவதூறு வழக்கில், பாடகி கெனிஷா டிசம்பர் 3ம் தேதி நேரில் ஆஜராக சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.