தெலுங்கு திரை உலகில் இயக்குனராக அறிமுகமான சிவா, தற்போது தமிழ் சினிமாவிலும் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வருகிறார். அந்த வகையில் இவர், கடந்த 2011ம் ஆண்டு கார்த்தி, தமன்னா ஆகியோரின் நடிப்பில் வெளியான ‘சிறுத்தை’ படத்தை இயக்கி ரசிகர்கள் மனதில் இடம் பிடித்து அனைவராலும் ‘சிறுத்தை சிவா’ என்று அழைக்கப்பட்டு வருகிறார்.
தமிழில் இவர் இயக்கிய முதல் படமே சூப்பர் டூப்பர் ஹிட் அடித்த நிலையில் அஜித்தின் ‘வீரம்’,‘வேதாளம்’, ‘விவேகம்’, ‘விஸ்வாசம்’ என தொடர் வெற்றி படங்களை கொடுத்தார். அடுத்தது இவர் ரஜினியை வைத்து ‘அண்ணாத்த’ திரைப்படத்தை இயக்கினார். சூர்யாவின் நடிப்பில் பிரம்மாண்ட பட்ஜெட்டில் ‘கங்குவா’ எனும் பீரியாடிக் திரைப்படத்தை இயக்கினார் சிறுத்தை சிவா.
இந்நிலையில் இருவரது கூட்டணியில் 5-வது படம் உருவாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ‘குட் பேட் அக்லி’ படத்தை தொடர்ந்து அஜித்கு மார் தற்போது மீண்டும் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்கவுள்ளார். படப் பிடிப்பு விரைவில் தொடங்க இருக்கிறது.
இந்த படத்துக்கு பின்னர் ‘சிறுத்தை சிவா’ இயக்கத்தில் அவர் புதிய படத்தில் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. மீண்டும் அஜித்குமாருடன் கூட்டணியா?' என்ற கேள்விக்கு, “எல்லாம் சரியாக அமைந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும். என்ன மாதிரியான கதை என்பதை ரகசிய மாக வைத்துள்ளோம். உரிய நேரத்தில் அறிவிக்கப்படும்” என்கிறார் சிறுத்தை சிவா.