சினிமா செய்திகள்

சிவகார்த்திகேயன் இந்தத் தலைமுறையின் மிகப்பெரிய ஆக்ஷன் நட்சத்திரம் - வித்யுத் ஜம்வால்

‘மதராஸி’ படத்தில் சிவகார்த்திகேயன், வித்யுத் ஜம்வால் இணைந்து நடித்துள்ளனர்.

சென்னை,

சமீபத்திய பேட்டி ஒன்றில் சிவகார்த்திகேயனுடன் பணியாற்றிய அனுபவம் குறித்துப் பேசிய வித்யுத் ஜம்வால், சிவகார்த்திகேயன் சிறந்த திறமை கொண்டவர் என்று குறிப்பிட்டார்.

‘மதராஸி’ படம்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். 2025ம் ஆண்டு இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் அவர் நடித்த ‘மதராஸி’ திரைப்படம் வெளியானது. இந்த படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் பாலிவுட் நடிகர் வித்யுத் ஜம்வால் வில்லனாக நடித்திருந்தார். இப்படத்தில் இருவரும் இணைந்து நடித்த நிலையில், சிவகார்த்திகேயனின் நடிப்புத் திறன் மற்றும் ஆக்‌ஷன் திறன் குறித்து வித்யுத் ஜம்வால் பாராட்டியுள்ளார்.

சிவகார்த்திகேயனின் திறமை குறித்து பாராட்டு

சமீபத்திய பேட்டி ஒன்றில் சிவகார்த்திகேயனுடன் பணியாற்றிய அனுபவம் குறித்துப் பேசிய வித்யுத் ஜம்வால், சிவகார்த்திகேயன் சிறந்த திறமை கொண்டவர் என்று குறிப்பிட்டார்.

மேலும், “இந்தத் தலைமுறையின் முக்கியமான ஆக்‌ஷன் நட்சத்திரங்களில் ஒருவராக சிவகார்த்திகேயன் விரைவில் உருவெடுப்பார். அவருடன் இணைந்து பணியாற்றியிருக்கிறேன். ஆக்‌ஷன் படங்களில் நடிக்கும் நடிகர் என்ற முறையில், ஒருவருடன் இணைந்து நடிக்கும்போது அவருடைய திறனை என்னால் அறிந்துகொள்ள முடியும்” என்று தெரிவித்தார். சிவகார்த்திகேயனின் எதிர்காலம் குறித்த வித்யுத் ஜம்வாலின் இந்தப் பாராட்டு தற்போது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

விஜய்யுடன் நடித்த ‘துப்பாக்கி’ அனுபவம்

இதே பேட்டியில், விஜய் நடிப்பில் வெளியான ‘துப்பாக்கி’ திரைப்படத்தில் நடித்த அனுபவத்தையும் வித்யுத் ஜம்வால் பகிர்ந்துகொண்டார். அந்தப் படம் தனது திரைப்பயணத்தில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற முதல் திரைப்படம் என்று அவர் குறிப்பிட்டார்.

‘துப்பாக்கி’ வெளியானபோது படம் வெற்றிபெறும் என்பது தெரிந்திருந்ததால், வெளியான அன்றே சென்னைக்குச் சென்று வெற்றியைக் கொண்டாட விமானத்தில் பயணித்ததாகவும் அவர் நினைவுகூர்ந்தார்.

SCROLL FOR NEXT