சிவகார்த்திகேயன் நடிக்கும் அவரது 27-வது திரைப்படத்தின் அப்டேட் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். ‘மெரினா’ திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமான இவர், தொடர்ந்து பல வெற்றிப்படங்களை கொடுத்து தமிழ் சினிமாவில் தனக்கென தனி இடத்தை பிடித்துள்ளார். அவரது நடிப்பில் வெளியான ‘அமரன்’ திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.
‘அமரன்’ படத்தின் வெற்றியை தொடர்ந்து வெளியான ‘மதராஸி’ மற்றும் ‘பராசக்தி’ ஆகிய திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றன. தற்போது கமல்ஹாசன் தயாரிப்பில் உருவாகி வரும் ‘சேயோன்’ திரைப்படத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வருகிறார். மதுரையை பின்னணியாகக் கொண்டு உருவாகி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.
சிவகார்த்திகேயனின் புதிய திரைப்படத்தை இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கவுள்ளார். இப்படத்திற்கான பூஜையும் நடைபெற்று முடிந்தது.
இந்த நிலையில், இப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான சத்யஜோதி பிலிம்ஸ் நாளை (செப். 25) பெரிய அறிவிப்பு வருகிறது என அப்டேட் கொடுத்துள்ளனர்.
‘பார்க்கிங்’ திரைப்படம் மூலம் பெரியளவில் கவனிக்கப்பட்டவர் ராம்குமார் பாலகிருஷ்ணன். அப்படத்திற்காக தேசிய விருதையும் வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.