சினிமா செய்திகள்

அஜித் நடிக்கும் டேர் டெவில் படத்தில் இணையும் சிவராஜ்குமார்

அஜித்துக்கும் வில்லனாக சிவராஜ்குமார் நடிப்பதாக கூறப்படுகிறது.

சென்னை,

நடிகர் அஜித்குமார் நடிப்பில் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கிய 'குட் பேட் அக்லி' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. இதைத்தொடர்ந்து, இருவரும் மீண்டும் புதிய படத்தில் இணைந்துள்ளனர். 'டேர்டெவில்' (Daredevil) என்று பெயரிடப்பட்டுள்ள இப்படம் அஜித்தின் 64-வது திரைப்படமாகும். இப்படத்தை அஜித்தின் மனைவி ஷாலினி தனது பிரேவ்ஹார்ட்ஸ் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் மூலம் தயாரிக்கிறார்.

ஐதராபாத்தில் படப்பிடிப்பு

இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். அஜித்துடன் ஏற்கனவே 'விவேகம்', 'வேதாளம்', 'விடாமுயற்சி' ஆகிய படங்களில் பணியாற்றியுள்ள அனிருத், தற்போது நான்காவது முறையாக இணைந்துள்ளார். அஜித் குமார் நடிக்கும் 'டேர் டெவில்' படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியுள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன. அடுத்தகட்ட படப்பிடிப்புகள் சென்னை மற்றும் வெளிநாடுகளில் நடைபெறவுள்ளன.

வில்லனாக..

இந்த நிலையில், டேர் டெவில் படம் தொடர்பான புதிய அப்டேட் ஒன்று வந்துள்ளது. அதாவது, டேர் டெவில் படத்தில் பிரபல கன்னட நடிகர் சிவராஜ்குமார் இணையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், அஜித்துக்கும் வில்லனாக சிவராஜ்குமார் நடிப்பதாக கூறப்படுகிறது. ஓரிரு நாட்களில் அவர் படக்குழுவுடன் இணைவார் என்றும் சினிமா வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

SCROLL FOR NEXT