சினிமா செய்திகள்

இரண்டு நாட்களிலேயே இத்தனை கோடியா? ‘ஜெயிலர் 2’ வசூல் விவரம்

‘ஜெயிலர் 2’ திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

சென்னை,

'ஜெயிலர் 2' திரைப்படம், வெளியான இரண்டே நாள்களில், இந்தியாவில் ரூ.112.10 கோடியும், வெளிநாடுகளில் ரூ.97 கோடியும் என மொத்த உலகளாவிய வசூல் ரூ.209.10 கோடியை எட்டியுள்ளதாகத் தகவல் கிடைத்துள்ளன.

‘ஜெயிலர் 2’

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில், இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஜெயிலர் 2’ திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியானது. 2023-ம் ஆண்டு வெளியான ‘ஜெயிலர்’ திரைப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற நிலையில், அதன் இரண்டாம் பாகத்துக்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவியது.

முதல் பாகத்தில் நடித்த மோகன்லால், சிவராஜ்குமார், ரம்யா கிருஷ்ணன், மிர்ணா மேனன், யோகிபாபு உள்ளிட்டோர் இந்தப் படத்திலும் இடம்பெற்றுள்ளனர். இவர்களுடன் எஸ்.ஜே.சூர்யா, ஹிருத்திக் ரோஷன், மிதுன் சக்கரவர்த்தி, விஜய் சேதுபதி, நமோ நாராயணா உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ள இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

காமெடி, ஆக்‌ஷன், எமோஷன்!

படத்தின் முதல் பாதியில் நமோ நாராயணா, யோகிபாபு உள்ளிட்டோரின் நகைச்சுவைக் காட்சிகள் ரசிகர்களைக் கவர்வதாகக் கூறப்படுகிறது. இரண்டாம் பாதியில் ஆக்‌ஷன் மற்றும் உணர்வுப்பூர்வமான காட்சிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. அனிருத்தின் பின்னணி இசையும் படத்துக்கு வலுசேர்ப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

2 நாட்களில் ரூ.209.10 கோடி வசூல்?

இந்நிலையில், ‘ஜெயிலர் 2’ திரைப்படம் இரண்டு நாட்களில் எவ்வளவு செய்துள்ளது என்பது குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி, இப்படம் உலகளவில் இரண்டு நாட்களில் ரூ.209.10 கோடி வசூலித்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதில் இந்தியாவில் ரூ.112.10 கோடியும், வெளிநாடுகளில் ரூ.97 கோடியும் வசூலித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், இப்படம் ரூ.1,000 கோடி வசூலை எட்டுமா என்ற எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

SCROLL FOR NEXT