கோப்புப்படம் 
சினிமா செய்திகள்

தனிமை மகிழ்ச்சியாக இருக்கிறது - நடிகை ஹன்சிகா

தனிமை எனக்கு எப்போதுமே பிடிக்கும் என்று நடிகை ஹன்சிகா தெரிவித்துள்ளார்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக ஜொலித்த ஹன்சிகா மோத்வானி கடந்த 2022-ம் ஆண்டு சோஹைல் கட்டாரியா என்ற தொழில் அதிபரை காதல் திருமணம் செய்து கொண்டார். இதற்கிடையில் கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 2 ஆண்டுக ளாக கணவரை பிரிந்து வாழ்ந்த ஹன்சிகா, சமீபத்தில் விவாகரத்து பெற்றார்.

விவாகரத்துக்கு பிறகு கோவில் கோவிலாக சுற்றி வரும் ஹன்சிகா, வட இந்தியா தாண்டி விரைவில் தென் இந்திய பகுதிகளிலும் உள்ள கோவில்களுக்கு வருகை தரவிருக்கிறார். இதற்கிடையில் சமீபத்தில் ஹன்சிகா ரசிகர்களுடனான ஒரு கலந்துரையாடலில், "இப்போது மகிழ்ச்சியாகவும், சுதந்திரமாகவும் இருக்கிறேன். தனிமை எனக்கு எப்போதுமே பிடிக்கும். இப்போது அந்த தனிமை மகிழ்ச்சி கலந்து இருக்கிறது.

எனக்கானவர்களுக்கு நேரம் செலவிடுவதும், எனக்கு பிடித்தமானவற்றை செய்வதும் என்னை சந்தோஷமாக வைத்திருக்கிறது”, என்றார்.

SCROLL FOR NEXT