சினிமா செய்திகள்

அபிஷன் ஜீவிந்த் நடிக்கும் “பிக்காசோ” படத்தின் பர்ஸ்ட் சிங்கிளை வெளியிடும் சூரி

கௌதம் சிவராமன் இயக்கத்தில் சிவராஜ்குமார், அபிஷன் ஜீவிந்த் நடித்துள்ள ‘பிக்காசோ’ படத்திற்கு லியோன் ஜேம்ஸ் இசையமைத்துள்ளார்.

சிவராஜ் குமார், அபிஷன் ஜீவிந்த் நடிப்பில் உருவாகியுள்ள ‘பிக்காசோ’ படத்தின் ‘ஹக்கூனா மட்டாட்டா’ பாடல் இன்று மாலை வெளியாகிறது.

சிவராஜ்குமாருடன் இணையும் அபிஷன்

தற்போது அபிஷன் ஜீவிந்த், அறிமுக இயக்குநர் கௌதம் சிவராமன் இயக்கத்தில் உருவாகும் புதிய திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார். இப்படத்தில் கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமார், அபிஷன் ஜீவிந்த்தின் தந்தையாக நடிக்கிறார். மேலும், யோகலட்சுமி, கானா வினோத், ஷிவானி நாகராம் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படத்திற்கு லியோன் ஜேம்ஸ் இசையமைக்கிறார்.

‘பிக்காசோ’ எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் சமீபத்தில் தொடங்கியது. இதனைத் தொடர்ந்து படத்தின் அறிமுகக் காட்சிகள் அடங்கிய கிளிம்ப்ஸ் வீடியோவையும் படக்குழு வெளியிட்டிருந்தது.

இன்று வெளியாகும் முதல் பாடல்

சிவராஜ் குமார், அபிஷன் ஜீவிந்த் நடிப்பில் உருவாகியுள்ள ‘பிக்காசோ’ படத்தின் ‘ஹக்கூனா மட்டாட்டா’ பாடல் இன்று மாலை 5.30 மணிக்கு வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. அபிஷன் ஜீவிந்த் மற்றும் சிவராஜ்குமார் இணைந்து நடிக்கும் இப்படத்தின் முதல் பாடலைக் கேட்க ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

SCROLL FOR NEXT