சூரியின் ‘மண்டாடி’ திரைப்படம் ஓடிடி தளத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.
சூரியின் நடிப்பில் கடந்த செப்டம்பர் 10ந் தேதி வெளியான படம் ‘மண்டாடி’.மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில் உருவாகியுள்ள ‘மண்டாடி’ படத்தில் சூரி கதாநாயகனாக நடித்துள்ளார். எல்ரட் குமார் தயாரித்துள்ள இப்படத்தில் மகிமா நம்பியார் கதாநாயகியாக நடித்துள்ளார். ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். சுஹாஸ், சத்யராஜ், ரவீந்திரா விஜய், அச்யுத் குமார், சாச்சனா நமிதாஸ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
மீனவர்களின் வாழ்க்கையை பின்னணியாகக் கொண்டு உருவாகியுள்ள இப்படத்தின் கதை, அவர்களுக்கிடையே நடைபெறும் படகுப்போட்டியை மையமாகக் கொண்டுள்ளது.
ரசிகர்களின் ஆதரவைப் பெற்ற ‘மண்டாடி’ திரைப்படம் உலகளவில் ரூ. 150 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது. இந்த படத்தியில் சூரியின் நடிப்பில் பெரிய அளவில் பேசப்பட்டு வருகிறது.
சூரியின் ‘மண்டாடி’ படம் கடந்த அக்டோபர் 8ந் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியானது. தியேட்டர்களில் படத்தை காண தவறியவர்கள் ஓடிடியில் கண்டு ரசிக்கலாம்.
இந்த நிலையில், ‘மண்டாடி’ நெட்பிளிக்ஸ் ஓடிடியில் அதிகம் பார்க்கப்படும் இந்தியத் திரைப்படங்களில் கடந்த சில நாள்களாக தொடர்ந்து முதலிடத்தில் இருக்கிறது.
இதற்கு முன், நடிகர் சூர்யாவின் ‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’ திரைப்படமும் இந்திய அளவில் அதிகம் பார்க்கப்பட்ட படமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.