சினிமா செய்திகள்

முதல்-அமைச்சர் விஜய்யை சந்தித்த தென்னிந்திய நடிகர் சங்க நிர்வாகிகள்

தென்னிந்திய நடிகர் சங்கத்தலைவர் நாசர், பொருளாளர் கார்த்தி, துணைத்தலைவர் பூச்சி முருகன், கருணாஸ் உள்ளிட்டோரும் முதல்-அமைச்சர் விஜய்யை சந்தித்தனர்.

தமிழ்நாடு முதல்-அமைச்சராக தவெக தலைவர் விஜய் கடந்த 10-ந்தேதி பதவியேற்றார். தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் விஜய்க்கு பதவிப் பிரமாணமும் ரகசியக் காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். இதையடுத்து முக்கியமான 3 கோப்புகளில் முதலமைச்சர் விஜய் கையெழுத்திட்டார்.

இதற்கிடையே தலைமைச் செயலகத்தில் இன்று தமிழகத்தில் உள்ள தொழில் நிறுவனங்களின் உயர் அதிகாரிகளுடன் முதலமைச்சர் விஜய் ஆலோசனையில் ஈடுபட்டார். இதைத்தொடர்ந்து வேளாண், நீர்வளத்துறை செயல்பாடுகள் குறித்து அவர் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.

இந்நிலையில் தமிழ்நாட்டின் முதல்-அமைச்சராக பொறுப்பேற்றுள்ள விஜய்யை தென்னிந்திய நடிகர் சங்க நிர்வாகிகள் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர். தென்னிந்திய நடிகர் சங்கத்தலைவர் நாசர், பொருளாளர் கார்த்தி, துணைத்தலைவர் பூச்சி முருகன், கருணாஸ் உள்ளிட்டோரும் அவரை சந்தித்தனர்.