சினிமா செய்திகள்

கமல்ஹாசனுடன் தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்க நிர்வாகிகள் சந்திப்பு

தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தின் புதியதாக தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகள், கமல்ஹாசனை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தின் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கமல்ஹாசனை ராஜ்கமல் அலுவலகத்தில் சந்தித்தனர்.

தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தின் புதிய நிர்வாகிகளுக்கு வாழ்த்து தெரிவித்த கமல்ஹாசன், திரைப்பட எழுத்தாளர்களின் நலன்களை பாதுகாக்கும் வகையில் சங்கத்தின் செயல்பாடுகளை சிறப்பாக கொண்டு செல்ல வேண்டும் என அறிவுறுத்தினார். மேலும், அமைப்பை வலிமையுடன் வழிநடத்துவதற்கான பல்வேறு ஆலோசனைகளையும் அவர் வழங்கினார்.

தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தினர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

எழுத்தாளர்கள் சங்கத்தின் சார்பாக, மரியாதை நிமித்தமாக எங்களின் முன்னோடியும் திரையுலகின் முக்கிய எழுத்தாளர்களில் ஒருவராக திகழும் கமல்ஹாசன் அவர்களை நிர்வாகிகளும் செயற்குழு உறுப்பினர்களும் சந்தித்து மகிழ்ந்தோம். சினிமாவில் வியக்கத்தக்க எழுத்தாளர்கள் நிறைய பேர் இருந்தாலும் கமல்ஹாசன் அடுத்த தலைமுறைக்கான பாதையை வகுத்துக் கொடுத்த ஒரு முன்னோடியான எழுத்தாளர் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை. அந்த எழுத்தாளரைச் சந்தித்து அவருடைய அனுபவங்களையும், அவருடைய வழிகாட்டுதலையும் நாங்கள் கேட்டுக்கொள்ள நேரம் ஒதுக்க கேட்டிருந்தோம். அதை ஏற்றுக்கொண்டு அவர் எங்களைச் சந்தித்தார். அப்போது நிறைய விஷயங்களை எங்களிடம் பகிர்ந்தார்.

அவர் உருவாக்கிய படங்களான மகாநதி, அன்பே சிவம், ஹே ராம், குணா, தேவர் மகன் என அனைத்திலும் அவருடைய எழுத்துகள் மிகவும் வலிமையானதாகவும் கூர்மையானதாவும் இருக்கும். சிறிய வசனமாக இருந்தாலும் பெரும் அர்த்தத்தைச் சொல்லும்.

அந்த மாதிரியான எழுத்துகளைக் கொடுத்தவர் தான் கமல்ஹாசன். அவரை சந்தித்தது எங்களுக்கு பெரிய உற்சாகம். வாழ்த்து தெரிவித்த கமல்ஹாசன் எங்களை நேரம் ஒதுக்கி சந்தித்து, வாழ்த்துகளைத் தெரிவித்து, சங்கத்தை சிறப்பாக நடத்துங்கள் என்று சொல்லி அனுப்பினார். இந்த சந்திப்பு எங்களுக்கு என்றென்றும் நினைவில் இருக்கும்” என தெரிவித்துள்ளது.

சேரனின் ‘நம்ம கே.பாக்​ய​ராஜ்’ அணி​ வெற்றி

தென்​னிந்​தி​யத் திரைப்பட எழுத்​தாளர்​கள் சங்​க தேர்தலில் சேரனின் ‘நம்ம கே.பாக்​ய​ராஜ்’ அணி​ வெற்றி பெற்றுள்ளது.திரைப்பட எழுத்தாளர்கள் சங்க தேர்தலில் துணை தலைவர் பதவிக்கு நம்ம கே.பாக்யராஜ் அணி சார்பாக போட்டியிட்ட நடிகர்கள் சமுத்திரக்கனி, சினேகன் வெற்றி பெற்றுள்ளனர்.

SCROLL FOR NEXT