சினிமா செய்திகள்

"சூர்யா 46" படத்தின் சிறப்பு போஸ்டர் வெளியீடு

நடிகர் சூர்யா வெங்கி அட்லூரியுடன் இணைந்து தனது 46-வது படத்தின் படப்பிடிப்பில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.

சென்னை,

சூர்யாவின் நடிப்பில் அடுத்து திரையரங்குகளில் வெளியாக இருக்கும் படம் ''கருப்பு''. இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இதற்கிடையில், ''லக்கி பாஸ்கர்'' இயக்குனர் வெங்கி அட்லூரியுடன் இணைந்து தனது 46-வது படத்தின் படப்பிடிப்பில் சூர்யா தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். இப்படத்திற்கு தற்காலிகமாக சூர்யா46 என்று பெயரிடப்பட்டுள்ளது. மமிதா பைஜு கதாநாயகியாக நடிக்கும் இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கிறார். சித்தாரா என்டர்டெயின்மென்ட்ஸ் மற்றும் பார்ச்சூன் போர் சினிமாஸ் ஆகிய நிறுவனங்கள் இந்தப் படத்தைத் தயாரிக்கின்றன. இந்த படத்திற்கான படப்பிடிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில், நடிகர் சூர்யா நேற்று தனது 50வது பிறந்த நாளை கொண்டாடினார். அவருக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவிக்கும் வகையில், சூர்யா 46 படக்குழு சிறப்பு போஸ்டர் ஒன்றை வெளியிட்டனர். அந்த போஸ்டர் இணையத்தில் வைரலாகி வருகிறது.

SCROLL FOR NEXT