சினிமா செய்திகள்

முன்னாள் மனைவியின் திருமணத்தை நடத்தி வைத்த “ஸ்பைடர்மேன்” பட நடிகர்

‘ஸ்பைடர் மேன்’ புகழ் நடிகர் டோபி மாகுவேர், தனது முன்னாள் மனைவியின் திருமணத்தை முன்னின்று வழி நடத்திய புகைப்படங்கள் வைரலாகியுள்ளன.

‘ஸ்பைடர் மேன்’ நடிகர் டோபி மாகுயர் தனது முன்னாள் மனைவியின் திருமணத்தை முன்னின்று நடத்தி வைத்துள்ளார்.

டோபி மாகுவேர்

ஹாலிவுட்டில் ‘ஸ்பைடர் மேன்’ திரைப்படங்களில் நடித்து புகழ்பெற்றவர் டோபி மாகுவேர் . ஸ்பைடர் மேன் திரைப்படத் தொடரின் முதல் மூன்று பாகங்களில் ஸ்பைடர் மேனாக இவர் நடித்துள்ளார்.

51 வயதாகும் இவர், கடந்த 2020-ஆம் ஆண்டில் தனது மனைவி ஜெனிபர் மேயரை பிரிந்தார். இந்த தம்பதிக்கு 19 மற்றும் 17 வயதில் இரண்டு பிள்ளைகள் உள்ளனர்.

டோபி மாகுயரும் அவரது முன்னாள் மனைவி ஜெனிபர் மேயரும் கடந்த பத்தாண்டுகளாகப் பிரிந்து வாழ்கின்றனர். இவர்கள், 6 ஆண்டுகளுக்கு முன்பு விவாகரத்துக் கோரி மனுத் தாக்கல் செய்திருந்தனர். கடந்த செப்டம்பரில் அதிகாரப்பூர்வமாக விவாகரத்துப் பெற்று இருவரும் பிரிந்தனர்.

முன்னாள் மனைவியின் திருமணத்தை நடத்தி வைத்த ‘ஸ்பைடர் மேன்’ நடிகர்

விவாகரத்து நடைபெற்ற சில நாள்களில், ஜெனிபருக்கும் இசை நிறுவன உரிமையாளரான பிரபல தொழிலதிபர் ஜெப் ஒகுன்லேசிக்கும் திருமணம் நடைபெற்றது. இந்தத் திருமணத்தை ஸ்பைடர் மேன் நாயகன் டோபியே முன்னின்று நடத்தி வைத்துள்ளார்.

ஹவாயில் திருமணம்

ஹவாயில் உள்ள போர் சீசன்ஸ் ரிசார்ட் லனாயில் நடைபெற்ற திருமணத்தில் லியோனார்டோ டிகாப்ரியோ உள்ளிட்ட பிரபலங்கள் பலர் இதில் கலந்துகொண்டனர்.

டோபியும் ஜெனிபரும் விவாகரத்துக்குப் பின்னரும் நண்பர்களாகவே இருந்து வருகின்றனர். தனது முன்னாள் மனைவியின் திருமண விழாவில் கலந்துகொண்டதுடன், அதனை முன்னின்று டோபி வழி நடத்திய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகியுள்ளன.

SCROLL FOR NEXT