வாஷிங்டன்,
இந்தியாவில், ஹாலிவுட் படங்களுக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. அதிலும் குறிப்பாக, மார்வெல் படங்களுக்கு ரசிகர்கள் அதிகம். அந்த வகையில் மார்வெல் படைப்புகளுள் ஒன்றாக உருவானதுதான், ஸ்பைடர் மேன் படங்கள்.
இதன் முதல் பாகமான ஸ்பைடர் மேன்: ஹேம் கம்மிங்கில் டாம் ஹாலண்ட் கதாநாயகனாக நடித்திருந்தார், அதனைத்தொடர்ந்து, ஸ்பைடர் மேன் பார் பிரம் ஹேம் படமும், கடைசியாக 3-வது பாகமாக ஸ்பைடர் மேன் நே வே ஹேம் படமும் வெளியாகின. இப்படங்களில் கதாநாயகியாக ஜெண்டயா நடித்திருந்தார். இந்த 3 பாகங்களையும் ஜான் வாட்ஸ் இயக்கி இருந்தார்.
இதனையடுத்து 4-வது பாகமான 'ஸ்பைடர்மேன் - பிராண்ட் நியூ டே' உருவாகி வருகிறது. இதனை டெஸ்டின் டேனியல் இயக்கி வருகிறார். இந்நிலையில், நடிகர் டாம் ஹாலாண்ட் நடிக்கும் 'ஸ்பைடர்மேன் - பிராண்ட் நியூ டே' படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக இயக்குநர் தெரிவித்துள்ளார்.